வாத்தியாருக்கெல்லாம் வாத்தியார்.தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இதோ.

0
2396
vijay-64
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். இளைய தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் உலகம் முழுவதும் இப்படம் 300 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் தனது 64 வது படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image

பெயரிடப்படாத இந்த படம் தளபதி 64 என்று அழைத்து வரப்பட்டது. . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்டை பட புகழ் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி சாந்தனு பாக்கியராஜ் ஆண்ட்ரியா கௌரி கிஷன் ஸ்ரீமன் சஞ்சீவ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தை வெளியிட திட்டமீட்டுள்ளனர். இந்த படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்புகள் தற்போது சிமோகாவில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என பட குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர். இந்த இந்த படத்திற்கு சின்ன வாத்தியார் அல்லது ஜே டி என்று தலைப்புகள் வைத்திருப்பதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘ மாஸ்டர்’என்று தலைப்பை வைத்துள்ளனர். இந்த தலைப்பால் ரசிகர்கள் குஷியாகி உள்ளார்கள்.

நாளை புத்தாண்டு முன்னிட்டு பர்ஸ்ட் லுக் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த குஷியில் ஆழ்ந்துள்ளார்கள். இது ஒருபுறம் இருக்க ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் செக்கண்ட் லுக் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி (அதாவது இன்று நள்ளிரவு 12 மணிக்கு) வெளியிடப்பட உள்ளது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த செக்கண்ட் லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் லுக் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement