விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கு பரிந்துரையில் 5 வில்லன்கள் – உங்கள் தேர்வு யார் ?

0
1921
- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 65 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கில தலைப்பை வைத்துள்ளனர். பீஸ்ட் என்றால் அசுரத்தனமான பெரிய மிருகம் என்று ஆங்கிலத்தில் அர்த்தப்படுகிறது. அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர். இதற்கு முன்னர் விஜய் லவ் டுடே, ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் என ஐந்து நேரடி ஆங்கில தலைப்புகளில் நடித்துள்ளார். 

-விளம்பரம்-
Image

விஜயின் 65வது திரைப்படத்தின் பெயர் டார்கெட் என பொதுவாக ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவி வந்த நிலையில் பீஸ்ட் என்ற பெயரை மிகவும் ரகசியமாக வைத்து படக்குழுவினர் வெளியிட்னர். அதே போல விஜய் யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -

அதேபோல கைதி படத்தில் பணியாற்றிய அன்பறிவு இரட்டையர்கள் ஸ்டன்ட் காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் இதை தவிர இந்த படத்தில் பணிபுரியும் மற்ற நடிகர்கள் பற்றிய விபரங்களை சன்பிக்சர்ஸ் இன்னும் வெளியிடவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்தப்படத்தின் வில்லனாக 5 நடிகர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதில் நடிகர் அருண்விஜய், இயக்குனர் செல்வராகவன், பேட்ட படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நவாசுதீன், பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம், துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜமால் போன்றவர்களின் பெயர்கள் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் எந்த வில்லன் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.

-விளம்பரம்-
Advertisement