சாரி, மகேஷ் அழுறத பாத்தா சிரிப்பு தான் வருது – விஜய் அவார்ட்ஸ் ப்ரோமோவை கண்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
863
- Advertisement -

விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வரும் கமெண்ட்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாக மக்களின் பேவரைட் சேனலாக விஜய் டிவி திகழ்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதனாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் விரும்பி பார்க்கும் சேனலாக விஜய் டிவி உள்ளது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் விஜய் டிவியில் இருந்து தான் ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த அளவிற்கு பல கலைஞர்களை உருவாக்கி வருகிறது. மேலும், வருடம் வருடம் விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு சில நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறவிட்டாலும் அனைத்து தரப்பு வகையில் கவரும் ஒரு நிகழ்ச்சி தான் விஜய் அவார்ட்ஸ். ஆண்டு தோறும் விஜய் டிவியில் நடந்து வரும் இந்த விழா 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

- Advertisement -

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி:

கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டு சினிமா துறை கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அதே போலவே விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் என்று பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

விஜய் டெலிவிஷன் விருது விழா பற்றிய தகவல்:

ஆண்டு தோரும் இந்த விருது வழங்கும் விழாவை விஜய் டிவி நடத்தி வருகிறது. கடந்த ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விழா கூட சிறப்பாக நடந்து இருந்தது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விருது வழங்கு விழா நடக்க உள்ளது. இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில் விஜய் டிவி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான ப்ரோமக்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் ப்ரோமோ:

இதில் நடிகர்கள் பலரும் விருதுகளை விருதுகளை வாங்கி கண்ணீருடன் பேசி இருக்கிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே பங்கமாக கலைத்து வருகிறார்கள். அதிலும் சிலர், விஜய் அவார்ட்ஸ்க்கு பதில் கிளிசரின் அவார்ட்ஸ் என்று பெயர் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். உலகத்தில் எல்லோருக்கும் பிரச்சினை இருக்கு. ஏதோ இவங்களுக்கு மட்டும் தான் இருக்குற மாதிரி பில்டப் பண்ணி இருக்கிறார்கள். இங்கு சந்தோஷம் கண்ணீர் எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது.

கலாய்க்கும் நெட்டிசன்கள்:

இந்த உலகத்தில் உணர்வுகளுக்கு மட்டும் தான் விலை இல்லை. ஆனால், அந்த உணர்வுகளையும் பொய்யா காமிச்சி வியாபாரம் ஆக்குறாங்கடா. எது உண்மையான அன்பு? எது வலிகள் நிறைந்த கண்ணீர்? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்க அழுதா எங்களுக்கு சிரிப்பு தாண்டா வருது. யார்ரா நீங்க, எழவு வீட்டில் பொம்பளைங்க கூட இப்படி அழ மாட்டாங்க. ஆனா, நீங்க இப்படி அழுறீங்களேடா என்று நெட்டிசன்கள் பலருமே விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் ப்ரோமோவை பார்த்து பயங்கரமாக கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள்.

Advertisement