அஜித்தை ஒரு போட்டியாக கருதவில்லையா விஜய் – வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய விஷயத்தால் அஜித்தை கேலி செய்யும் விஜய் ரசிகர்கள்.

0
431
vijayvarisu
- Advertisement -

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சால் அஜித்தை விஜய் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.

-விளம்பரம்-

தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் ‘தல, தளபதிக்கு’ ரசிகர்கள் அதிகம்.உண்மையிலேயே அஜித்தும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. ஆரம்ப காலத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்களது படங்களில் மாறி மாறி வசனங்களை பேசி இருக்கின்றனர்.

- Advertisement -

அவை எல்லாம் இயக்குனர்கள் எழுதிய வசனம் தான் என்றாலும் விஜய்-அஜித் ரசிகர்கள் அதை ஒரு வசன யுத்தமாக தான் பார்த்தனர். ஆனாலும், இந்த ரசிகர்கள் சன்டை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அஜித்தை விஜய் ரசிகர்கள் திட்டுவதும் விஜய்யை அஜித் ரசிகர்கள் திட்டுவதும் வாடிக்கையாக தான் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய விஷயத்தால் அஜித்தை விஜய் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

எனக்கு 1992ஆம் ஆண்டிலிருந்து ஒரு போட்டியாளர் இருக்கிறார். அவர் வெற்றியாளராக இருந்ததினால்தான் நான் அவருடன் போட்டி போட்டு கொண்டிருக்கிறேன் அவர் பெயர் ஜோசப் விஜய் என்று கூறிய தளபதி. Compete with Yourself, Be your own competition! என்று ரசிகர்களை ஊக்கு விக்கும் வகையில் வாரிசு ஆடியோ வெளியிட்டு விழாவில் தளபதி விஜய் பேசியிருந்தார். விஜய் இப்படி பேசி இருப்பதை பகிரும் விஜய் ரசிகர்கள் அஜித் எல்லாம் விஜய்க்கு போட்டியே கிடையாது என்று Memesகளை போட்டு கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய், அஜித்தை போல கோட் சூட்டில் மாஸாக வந்து இருந்தார். அப்போது பேசிய அவர் ‘நம்ப நண்பர் அஜித் போல போகலாம்னு கோர்ட் சூட் போட்டு வந்தேன்’ என்று கூறி இருந்தார். இப்படி இருக்க விஜய் தன்னுடைய போட்டியாளர் தான் தான் என்று பேசி இருப்பது அஜித்தை அவர் ஒரு போட்டியாளராக கருதவில்லையா என்ற கேள்வியை எழ வைத்து இருக்கிறது.

விஜய்யின் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அஜித்தை விஜய் ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். அதே சமயம் விஜய்யின் இந்த பேச்சை அஜித் ரசிகர்களும் கேலி செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் மேலாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் நடித்த சில படங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்த ”ராஜாவின் பார்வையிலே’ படத்தின் போஸ்டரும் இடம்பெற்று இருந்தது தான் ஹைலைட்.

Advertisement