அவ எல்லாத்துக்கு திட்டிகிட்டே தான் இருப்பா – திரிஷா முன் பேசிய பேசிய விஜய். வைரலாகும் பழைய வீடியோ.

0
202
- Advertisement -

கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 22 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. விஜயின் தீவிர ரசிகையான சங்கீதா விஜயை சந்திப்பதற்காக சென்னைக்கு வந்து விஜய் பெற்றோர்களையும் சந்தித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சங்கீதாவை விஜய் பெற்றோர்களுக்கு பிடித்துப் போக சங்கீதாவிடம் விஜயை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டிருக்கிறார்கள். இதற்கு சங்கீதாவும் சம்மதித்து இருக்கிறார். ஆனால், ஆரம்பத்தில் இந்த திருமணத்திற்கு யோசித்து இருக்கும் விஜய் பின்னர் பெற்றோர்களின் ஆசைக்காக சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 22 ஆண்டுகளாக சங்கீதாவுடன் வாழ்ந்து வந்த விஜய் சமீப காலமாக சங்கீதாவுடன் பிரிந்துவிட்டதாக செய்திகள் வைரலாகி வருகிறது.

- Advertisement -

விஜய்-சங்கீதா விவாகரத்து:

அதுமட்டுமில்லாமல் சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு அவர் இரண்டாம் திருமணம் செய்துப்போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து விஜய் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. பின் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் கடந்த ஆண்டு நடத்திய மாணவர்கள் விழாவில், இந்த சமூக வலைத்தளத்தில் வரும் செய்திகள் எல்லாம் 75% பொய்யானவை. நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஒரு சில பேர் கவர்ச்சிகரமான தகவலை வெளியிடுவதாக நினைத்து சில போலியான தகவலையும் வெளியிடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

விஜய் மறுமணம்:

இதன் மூலம் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்வது, பெற்றோர்களை மதிக்காமல் விஜய் இருக்கிறார் என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இருந்தாலும் வழக்கம்போல் மீண்டும் விஜய்- சங்கீதா இருவருக்கும் இடையே பிரச்சனை என்றெல்லாம் பரப்பி வருகிறார்கள். அதற்கு ஏற்ப சங்கீதா எப்போதும் விஜய் படத்தின் ப்ரோமோஷன், இசை வெளியீட்டு விழா என்று எதுவாக இருந்தாலும் வந்துவிடுவார்.

-விளம்பரம்-

திரிஷா-விஜய் நெருக்கம்:

ஆனால், சில ஆண்டுகளாக சங்கீதா விஜயினுடைய படத்தின் எந்த விழாவிற்கும் வரவில்லை. இதன் மூலம் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு லியோ படத்தில் விஜய் திரிஷாவுடன் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தார். இதுவும் இவருடைய பிரிவுக்கு காரணமாக இருக்கும் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் திரிஷா முன்பு தன்னுடைய மனைவி சங்கீதாவை குறித்து விஜய் பேசியிருக்கும் பழைய வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

விஜய் பேசிய பழைய வீடியோ:

பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் திரிஷா- விஜய் இருவருமே பங்கேற்று இருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர், உங்கள் மனைவி உங்களை என்ன சொல்லி திட்டுவாங்க? என்று விஜய் இடம் கேட்டு இருக்கிறார். அதற்கு விஜய், அவ எல்லாத்துக்கும் திட்டிக்கொண்டே தான் இருப்பா என்று விளையாட்டாக பதில் அளித்து இருந்தார். இவர் பல வருடங்களுக்கு முன்பு பேசியிருந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement