18 ஆண்டுக்கு முன் நடிப்பே வேண்டாம் என்று அறுன்விஜய் எடுத்த முடிவு – விஜய் சொன்ன அட்வைஸ்சால் மாறிய வாழக்கை

0
370
vijay
- Advertisement -

வாரிசு நடிகர் ஒருவரின் வாழ்க்கையை விஜய் தான் மாற்றி இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘பீஸ்ட்’.

-விளம்பரம்-

வாழ்க்கையை விஜய் தான் மாற்றி இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘பீஸ்ட்’.

- Advertisement -

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்று கூறப்படுகிறது.

விஜய் நடிக்கும் படங்கள்:

தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் வாரிசு நடிகரின் வாழ்க்கையை விஜய் மாற்றி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அருண் விஜய் குறித்த தகவல்:

அவர் வேறு யாரும் இல்லைங்க, நடிகர் அருண் விஜய் தான். இவர் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவரால் சினிமா துறையில் சாதிக்க முடியவில்லை. பின் இவர் தயாரிப்பில் இறங்கினார். அருண் விஜய் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது பலரும் அறிந்த ஒன்று. அதனால் அஜித் படத்தை தயாரிக்கலாம் என்று முன் வந்த போது அஜித் வேறு ஒரு படத்தில் பிஸியாக இருந்தார். அதனால் அவரை சந்திக்க முடியாமல் போயுள்ளது. பின்னர் விஜய்யை சந்திக்க முயற்சி செய்த போது அவரும் பிஸியாக இருந்துள்ளார். இதனால் விஜயின் மேனேஜருக்கு போன் செய்து விஜய்யை சந்திக்க அருண் விஜய் கேட்டிருக்கிறார்.

விஜய் சொன்ன அறிவுரை:

அந்த சமயத்தில் விஜய் அவருடைய வீட்டிற்கு அழைத்து அருண் விஜயை உபசரித்திருக்கிறார். அப்போது படங்கள் எதுவும் சரியாக போகாது தான் நடிப்பை கைவிட்டு படத்தை தயாரிக்கலாம் என்று முடிவு செய்ததாக அருண் விஜய் கூறியிருந்தார். இதைக் கேட்ட விஜய் ஷாக் ஆகி என்னை விட நீங்கள் நன்றாக நடனம் ஆடக்கூடியவர். உங்களைப் பற்றி என்னுடைய நண்பன் சஞ்சீவ் கிட்ட நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறேன். உங்களது திறமைக்கு கண்டிப்பாக நேரம் வரும். அந்த சமயத்தில் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

அருண் விஜய் நடிப்பு பயணம்:

உங்களை பற்றி எல்லோருக்கும் புரியவரும் என்று கூறியிருந்தார். இப்படி மிகப்பெரிய நடிகர் வாயால் பாராட்டுகள் கிடைத்தவுடன் அருண் விஜய் அங்கேயே கண்கலங்கி விட்டாராம். அதற்கு பிறகு தான் அருண் விஜய் நடிப்பை எப்போதுமே விடக்கூடாது என்று முடிவை எடுத்திருக்கிறார். விஜய் சொன்ன அந்த வார்த்தையால் தான் அருண் விஜயின் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்பட்டதாக ஒரு முறை பேட்டியில் கூட கூறியிருந்தார். அதுவரை ஹீரோவாக நடித்து வந்த அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி தற்போது தமிழ் சினிமா உலகில் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இவர் நடிப்பில் சினம் படம் வெளியாகி இருக்கிறது.

Advertisement