தல-தளபதி ஒன்றாக கலந்துகொண்ட நிகழ்ச்சி. வைரலாகும் அரிய வீடியோ.

0
821
vijay-ajith

தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் தான் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும், ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.

மேலும், ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து ராஜாவின் பார்வையில் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து படங்களில் நடிக்க வில்லை. உண்மையிலேயே அஜித்தும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. இருப்பினும் இவர்கள் மீண்டும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இவர்களுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம் என்பதால் இவர்களை பற்றின செய்தி எப்போதும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிங்கில் இருக்கும். கடந்த ஆண்டு விஜய்,அஜித் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது நடிகர் விஜய் அவர்கள் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படம் வெளியிடு தள்ளிவைக்கபட்டது.

நடிகர் அஜித்தும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித், விஜய் இருவரும் ஒன்றாக சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதுவரை யாரும் பார்த்திடாத தல, தளபதி வீடியோ. இந்த வீடியோவை விஜய்,அஜித் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்

-விளம்பரம்-
Advertisement