விஜய், அஜித் ஏன் உதவி செய்யவில்லை. ரசிகர்களின் கேள்வியால் கடுப்பான விஜய் அஜித் பட இயக்குனர்.

0
1675
vijay-ajith
- Advertisement -

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவினால் 2301 பேர் பாதிக்கப்பட்டும், 56 பேர் பலியாகியும் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

இந்த கொரோனவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர், கூலி வேலை செய்பவர்கள் என பலர் வாழ்வாதரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். நிறைய பேர் பிரதமர் மோடி நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணத்தை கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

சினிமா பிரபலங்களை தவிர விளையாட்டு துறையை சேர்ந்த பல பேரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 50 லட்சம் ரூபாய்யை சினிமா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து வருகிறார்.

-விளம்பரம்-

அதேபோல் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழி பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை தொழிலாளர்களுக்கு செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யும், தல அஜீத்தும் இதுவரை நிதி உதவி குறித்து எதுவும் பேசவில்லை. இவர்கள் இருவருமே தென்னிந்திய சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்.

ஆனால், இவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்வந்து நிதி அளிக்காது குறித்து சோசியல் மீடியாவில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் இது குறித்து இயக்குனர் பேரரசு அவர்கள் டுவிட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, ஓட்டுக்காக 50கோடி,100 கோடி என்று பணம் கொடுக்க தயார் இருக்கும் அரசியல்வாதிகள் கொரோனாவிற்காக எவ்வளவு கொடுத்தார்கள்?? எந்த நடிகர் எவ்வளவு கொடுத்தார் என்பதில் தான் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

நடிகர்கள் கொடுக்கும் பணம் எல்லாம் உழைத்து சம்பாதித்தது. ஊழல் பணம் இல்லை என்று அரசியல்வாதிகளை தாக்கி கூறியிருந்தார். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் அவர்கள் 25 கோடி ரூபாயை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாய் பண உதவி செய்துள்ளார். அதே போல் விளையாட்டு துறையை சேர்ந்த விராட்கோலி, கங்குலி உட்பட பலர் நிதி உதவி செய்து உள்ளார்கள்.

Advertisement