விஜய், அஜித் என்னை வாழ்த்தினார்கள் : நிவின் பாலி நெகிழ்ச்சி !

0
1821
- Advertisement -

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மலையாள நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. பல நட்சத்திரங்களும் பாராட்டி, படக்குழுவினரை பாராட்டு மழையில் நனைத்த்தார்கள்.
இதன் பிறகு பிரமம் பட நாயகன் நிவின் பாலிக்கு தமிழுகத்திலும் ரசிகர்கள் உருவனாரார்கள். இதுவரை நேரடி தமிழ் படங்களில் நடிக்காத நிவின்பால் தற்போது கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் ‘ரிச்சி’ என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரதா ஸ்ரீநாத், லட்சுமி குறும்பட நாயகி லட்சுமி சந்திரமௌலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

இந்த படத்தின் ப்ரோமோசன் வேலைக்காக தற்போது சென்னையில் வந்துள்ளார் நிவின் பாலி. படத்தின் இந்த விழாவில் தான் நடித்த பிரேமம் படத்தை தமிழ் சினிமாவின் உச்ச நாயகர்கள் தல மற்றும் தளபதி ஆகியோர் பாரட்டியதைக் கூறி மனம் நெகிழ்ந்தார்.
nivin-paulyஅஜித் சார் பிரேமம் படத்தை பார்த்து விட்டு எனக்கு போன் செய்து டின்னருக்கு அழைத்தார். அவரே எனக்கு பிரியாணி செய்து பரிமாறினார். மேலும், காலை மணி வரை என்னுடன் பேசினார். நான் எப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும் எனவும் எனக்கு அறிவுரை செய்தார் தல.

- Advertisement -

மேலும், தளபதி விஜயும் என்னை கால் செய்து பேசினார். பிரேமம் படத்தை பற்றி பாராட்டினார். ரொம்ப நேரம் போனில் பேசினார். அவ்வளவு பெரிய நடிகர் எனக்கு போன் செய்து பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மிகத் தாழ்மையாக என்னை அழைத்து வாழ்த்தினார் விஜய். என தல தளபதியுடனான நிகழ்வுகளை கூறி நெகிழ்ச்சி அடைந்தார் ‘ரிச்சி’ நவின் பாலி.

Advertisement