கேவலமான ஹேஷ் டேக் போட்டு மாறி மாறி கலாய்க்கும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள்.

0
808
vijay
- Advertisement -

வழக்கம்போல சோசியல் மீடியாவில் மீண்டும் விஜய்-அஜித் ரசிகர்களின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையையும், கலவரத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே சோசியல் மீடியாவில் நடிகர், நடிகைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும், பேசுவதும் அவர்களை எதிர்ப்பவர்களை திட்டுவதும் தான் ரசிகர்களின் காலம் காலமாக செய்து வருகிறார்கள். அதிலும்
காலத்திற்கு ஏற்ப சமூக வலைத் தளங்களின் எண்ணிக்கை கூடுவது போல விஜய் –அஜித் நடிகர்களின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் அஜித் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்குமே சரிக்கு சமமான மாபெரும் ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் மாபெரும் ஒன்றே. இவர்களுக்கு என்று ரசிகர் கூட்டம் தொடங்கியதில் இருந்தே ரசிகர்களுக்கு இடையே நீயா நானா? போட்டி தொடங்கியது.

-விளம்பரம்-

சமீப காலமாக இரு ரசிகர்களும் ஒற்றுமையாக இருந்து வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் இன்னும் தலயா , தளபதியா என்ற சண்டையை விடுவதாக இல்லை. இதனால் சோசியல் மீடியாவில் அடிக்கடி இரு ரசிகர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் விஜய் –அஜித் ரசிகர்கள் கோதாவில் இறங்கி உள்ளார்கள். அப்படி என்ன நடந்தது என்றால் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பத்திரிகை பேட்டி ஒன்றில் தன் மகனுக்கும் தனக்கும் பிரச்சனை இருப்பதாக சொல்லி வருத்தப்பட்டு இருந்தார். இதை கண்ட அஜித் ரசிகர்கள் உடனடியாக ட்விட்டரில் ‘#பெத்தவர்கிட்டபேசுங்கவிஜய்’ என்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி விஜய்க்கு அறிவுரை சொல்லி வந்தவர்கள்.

- Advertisement -

இப்படி வந்த அறிவுரை வார்த்தைகள் சில நாட்களில் விஜயை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய தொடங்கியது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் உடனே ‘#வாழவிடுங்கஅஜீத்’ என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கோதாவில் குதித்தனர். அதோடு விஜய் ரசிகர்கள் இதைப் பயன்படுத்தி அஜீத் தமிழகத்து தயாரிப்பாளர்களைப் புறக்கணிப்பதையும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலருக்கும் உதவி செய்ய மறுப்பதையும், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதையும் சொல்லிக் காட்டி பயங்கரமாக திட்டி வருகின்றனர். இப்படி மாத்தி மாத்தி சோசியல் மீடியாவில் இந்த இரண்டு ஹேஸ்டேக்கள் தான் ட்ரெண்டிங்கில் வருகின்றன.

vijay

ஆனால், சம்பந்தப்பட்ட இரண்டு நடிகர்களுமே இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே பேசிக் கொண்டிருந்தால் சோசியல் மீடியாவில் மட்டுமில்லாமல் நேரிலேயே ரசிகர்களுக்கு மத்தியில் கலவரம் வெடிக்க தொடங்கும். எந்த விபரீதமும் நடப்பதற்கு முன்னே சம்பந்தப்பட்ட நடிகர்கள் இது குறித்து பேசினால் நன்றாக இருக்கும் என்று சில தரப்பினர் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement