விஜயுடன் அஜித் நடித்து பின்னர் கைவிட்ட படம்.! வைரலாகும் படத்தின் ஸ்டில்.! எந்த படம் தெரியுமா?

0
10196
vijay
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி பிரபலமான நடிகர்களில் ஒருவராகவும், மக்களிடையே அதிக வரவேற்பையும் அன்பையும் பெற்றவர் தான் அஜித் குமார் அவர்கள். இவரை ரசிகர்கள் ‘தல’ என்றும், திரையுலகினர் ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் தான் அழைப்பார்கள். தமிழில் ‘அமராவதி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமாத்துறையில் அறிமுகமானவர்.அதனைத்தொடர்ந்து காதல் மன்னன், காதல் கோட்டை, ஆசை,வரலாறு ஆகிய படங்களில் மூலம் மக்களிடையே அதிக அளவு பிரபலமானார். தற்போது “நேருக்கு நேர்” படத்தில் கொஞ்சம் நாட்கள் மட்டும் நடித்து விட்டு விலகிய அஜித் அவர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.இது குறித்து நெட்டிசன்கள் வினவி கொண்டு வருகின்றன.

-விளம்பரம்-

இதனைத்தொடர்ந்து தமிழ் சினிமா துறையில் சூப்பராக கலக்கி கொண்டிருப்பவர்களில் ஒருவர் தான் ‘தளபதி விஜய்’.விஜய்யும், அஜித் இணைந்து “ராஜாவின் பார்வையிலே” என்ற படம் நடித்தார்கள். அதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் தனித்தனியாக ரசிகர் கூட்டமே சேர்ந்து விட்டது கூட என சொல்லலாம். மேலும், விஜய்க்கு வரும் படத்தில் அஜித்தும்,அஜித்துக்கு வரும் படத்தில் விஜய்யும் மாற்றி மாற்றி நடித்து வந்தார்கள். இவர்கள் இடையே நட்புறவு இருந்து கொண்டு தான் வந்தது.அதனை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளிவந்த ‘நேருக்கு நேர்’ படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து ஆரம்பத்தில் நடித்தனர்.

- Advertisement -

மேலும், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலகினார். சரவணன் என்ற இளைஞரை அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். மேலும் சரவணனுக்கு சினிமா உலகில் சூட்டப்பட்ட பெயர்தான் சூர்யா. இந்த நேருக்கு நேர் படத்தில் சூர்யா, விஜய், சிம்ரன், கௌசல்யா மற்றும் பலர் நடித்து வெற்றிகரமாக ஓடியது. இதற்கு அடுத்து தல ,தளபதி இருவரும் தனித்தனியாகவே படங்களை நடித்த தொடங்கினர். ராஜாவின் பார்வையிலே இணைந்ததற்கு பிறகு இருவரும் வேறு எந்த படத்திலும் இணையவில்லை.இதனால் இவர்கள் படத்திலிருந்து விலகிய காரணத்தினால் ரசிகர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டனர்

மேலும், மங்காத்தா படப்பிடிப்பில் விஜய்யும் அஜீத்தும் சந்தித்து கொண்டு நெருங்கிய நண்பர்களாக பேசி வருகின்றனர். சுபநிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்கிறார்களோ இல்லையோ துக்க நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்வார்கள் .எங்கு பார்த்தாலும் இருவரும் பேசிக்கொண்டு கைகுலுக்கிக் மகிழ்ந்து கொள்வார்கள். ஆனால், தற்போது இவர்கள் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து ரசிகர்கள் தலயா? தளபதியா? என்ற பிரச்சனை நீங்கி கொஞ்சம் சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement