சுறா விஜய், அசல் அஜித் இருவரும் சந்தித்த தருணம்.! வைரலாகும் அறிய புகைப்படம்.!

0
1400
Vijay-ajith

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரண்டு மாபெரும் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். அதே போல இவர்கள் மத்தியில் துறை ரீதியாக பல போட்டிகள் இருந்தாலும் நிஜத்தில் அப்படி இல்லை என்பது பலரும் அறிந்த ஒரு விடயம்.

விஜய் மற்றும் அஜித் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக கடும் போட்டி நிலவியது. இவர்களது படங்களில் கூட இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பல வசனங்களை பேசி உள்ளதையும் நாம் அறிவோம்.

- Advertisement -

இருப்பினும் இவர்கள் இருவரும் நண்பர்களாக தான் திகழ்ந்து வருகின்றனர். இணையத்தில் இவர்கள் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் கூட இருக்க தான் செய்கிறது. ஆனால், இதுவரை இணையத்தில் வராதா ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் அடிக்கடி நேருக்கு நேர் மோதியுள்ளது. அந்த வகையில் விஜய் நடித்த சுறா மற்றும் அஜித் நடித்த அசல் படம் ஒரே ஆண்டு வெளியாகி இருந்தது . இந்த படத்தின் போது விஜய் மற்றும் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement