விஜய் – அஜித் இணைந்து நடித்த படத்தில் அவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? 25 ஆண்டு கழித்து தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்.

0
4852

தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.

Rajavin Parvaiyile: ‛அஜித்-விஜய் இணைந்து நடித்தது எப்படி? அதிக சம்பளம் யாருக்கு? 25 ஆண்டு பிளாஷ்பேக் சொல்லும் தயாரிப்பாளர்!

ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையில் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அஜித் அந்த படத்தில் இருந்து திடிரென்று விலகிவிட்டார். அதன் பின்னர் இவர்களது படங்களில் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி வசனங்களை பேச ஆரம்பித்தனர்.

இதையும் பாருங்க : இதனால் தான் அந்த Wind Shield திறந்து இருந்தது – விபத்து குறித்து முதல் முறையாக யாஷிகா அளித்த பேட்டி.

- Advertisement -

இப்படி நிலையில் இந்த படத்தை தயாரித்த செளந்தர பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை அளித்துள்ளார். அந்தப் படம் எடுக்கும்போது விஜய், அஜித் இருவருமே சாதாரண நடிகர் தான். ஆனால், இன்று அவர்களிடம் டேட் வாங்குவதே கடினம். ஆனால், 25 ஆண்டுக்கு முன்னரே விஜய் அஜித் வாங்கி அதை படமாக்கிய பெருமை எங்களுக்கு உண்டு. முதலில் இந்த படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னேன்.

Rajavin Parvaiyile: ‛அஜித்-விஜய் இணைந்து நடித்தது எப்படி? அதிக சம்பளம் யாருக்கு? 25 ஆண்டு பிளாஷ்பேக் சொல்லும் தயாரிப்பாளர்!

அதன் பின்னர் இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் என்பதால் என் தம்பிக்கு வழக்கமான அஜித்திடம் இந்த கதையை சொன்னேன். இருவருமே போட்டி போட்டுக் கொண்டு தான் அந்த படத்தில் நடித்தார்கள். இருவரும் அவ்வளவு நட்பா இருப்பாங்க. அவங்க அளவுக்கு யாரும் நட்பா இருக்க முடியாது. படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவுதான் மேலும் விஜய் வெளி தயாரிப்பில் நடித்த முதல் படம் என்பதால் அவருக்கு மிகவும் கம்மியான சம்பளம்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் அஜித் அந்த சம்பளத்தை கூட வாங்கவில்லை.

-விளம்பரம்-
Advertisement