சக்ஸஸ் பார்ட்டியில் விஜய் மற்றும் அட்லீ போட்ட குத்தாட்டம். வைரலாகும் வீடியோ.

0
21349
atleevijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர் ஆவார். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டவர். இவர் தளபதி விஜயை வைத்து மூன்று முறை படம் இயக்கியுள்ளார். மூன்று படங்களுமே வசூலை அள்ளி தந்தது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு வெளியான பிகில் படம் உலகம் முழுவதும் பட்டைய கிளப்பியது.

-விளம்பரம்-
Ilayathalapathyvijay: Nanban Success Celebration...

- Advertisement -

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர் ஏற்கனவே தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கி இருந்தார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். பின் விஜய்யும், அட்லீ நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டார்கள். இந்நிலையில் நண்பர் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின் தளபதி விஜய், அட்லீ இருவரும் போட்ட குத்தாட்டம் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

2012 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் 2009 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

ஆரம்ப காலத்தில் இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார் தான் அட்லி. இந்நிலையில் இந்த நண்பன் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அந்தக் கொண்டாட்டத்தில் இயக்குனர் அட்லீயும், விஜய்யும் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார்கள். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இது ஒரு அரிய வீடியோ என்று பதிவிட்டு விஜய் ரசிகர்கள் அனைவரும் இதை ட்ரெண்டிங் ஆகி வருகின்றனர்.

Ilayathalapathyvijay: Nanban Success Celebration...

பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். சமீபத்தில் தான் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது.

Advertisement