விஜய்-அட்லீ அடுத்த படத்தின் மாஸ் தகவல்..! விஜய்க்கு முதல் முறை.! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

0
635
Atlee

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

vijay actor

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் அட்லீ தான் இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியான “தெறி” மற்றும் “மெர்சல் ” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், விஜய்யின் 63 வது படமான இந்த படத்தை முதன் முறையாக ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால்..இந்த தயாரிப்புடன் இணையும் விஜய் இணையும் முதல் படம் இதுதான்.மேலும், இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் ஆத்திகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

agsc

அதுபோக நடிகர் விஜய்யின் 63 வது படத்தின் தகவல்கள் வெளியாவதற்குள் நடிகர் விஜய் அடுத்து நடிக்க போகும் இந்த படத்தில் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அது இந்த படமாகவும் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.