விஜய் எப்படி செய்தாரோ அப்படி ..கேரளாவுக்கு நிவாரண நிதி கொடுத்த பில்கேட்ஸ்.!

0
873
- Advertisement -

கேரளாவில் பெய்து வந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் 70 லட்ச ரூபாய் நிதியுதவியை செய்திருந்தார்.

-விளம்பரம்-

vijay flood

- Advertisement -

இந்நிலையில் கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான பில் கேட்ஸ் மழை வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 6 லட்சத்தை வழங்கியுள்ளார். அதுவும் நடிகர் விஜய் நிதியுதவியளித்த பணியில் உதவி செய்துள்ளார் பில் கேட்ஸ்.

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் கேரளாவில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள தனது ரசிகர் மன்றத்திற்கும் தலா 3 லட்ச ரூபாய் என்று மொத்தம் 70 லட்ச ரூபாயை அனுப்பிவைத்துள்ளார். மேலும், அந்த பணத்தை வைத்து அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

-விளம்பரம்-
Bill Gates
Microsoft chairman Bill Gates speaks to shareholders at the 2008 Microsoft Shareholder Meeting in Bellevue, Washington, November 19, 2008. Robert Sorbo/Microsoft/Handout

அரசாங்கத்திடம் நிதியை கொடுத்து அது மக்களிடம் வந்து சேர பல நாள் ஆகும் என்பதால் அதை நாமே நேரடியா மக்களிடம் கொண்டு செல்வோம் என்று நினைத்து விஜய் தனது ரசிகர்கள் மூலம் கேரள மக்களுக்கு தனது ரசிகர் மன்றம் மூலம் நேரடியாக உதவி செய்தார்

தற்போது விஜய் செய்தது போலவே பில் கேட்ஸ்சும் தான் வழங்கிய நிதியை கேரளாவில் மக்களுக்கு மீட்பு பணி உதவிகளை செய்து வரும் சர்வதேச யுனிசெப் அமைப்பிடம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Advertisement