யாரு பெரியாளுனு அடிச்சி காட்டு. NTR ரசிகர்களுடன் மோதும் விஜய் ரசிகர்கள். எதுக்காக தெரியுமா ?

0
11372
vijay-ntr
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதே போல விஜய் குறித்து ஏதாவது சமூக வலைத்தளத்தில் யாராவது சொல்லிவிட்டால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஒன்று ஓடி விடுகின்றனர். மேலும், விஜய்யை மற்ற நடிகர்களுடன் ஒப்பீட்டு அடிக்கடி சண்டை போட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் ரசிகர்கள் தெலுங்கின் பிரபல நடிகரான ஜூனியர் என்டிஆரின் ரசிகர்களிடையே மோதலை துவங்கியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தெலுங்கு நடிகரான ஜூனியர் என் டி ஆர் பிரபல ஜாம்பவான் நடிகரான என் டி ஆரின் மகன் என்பது பலரும் அறிந்த விடயம். மேலும், ஜூனியர் என் டி ஆர் தெலுங்கு சினிமாவில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘நின்னு ச்சூட்லாணி ‘ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. ஆனால், அதன் பின்னர் வெளியான இவரது படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஜூனியர் என் டி ஆர்.

இதையும் பாருங்க : பட வாய்ப்புகள் இல்லை என்பதால் இப்படி ஒரு வேடத்தில் ஆனந்தி. ஏற்பார்களா ரசிகர்கள்.

- Advertisement -

ஜூனியர் என் டி ஆர் என்று சொன்னதும் நம் நினைவிற்கு முதலில் வருவது அவரது குண்டான உருவம் தான். ஆனால், அதற்கும் மேலாக இவர் நடனத்திலும் சிறந்து விளங்கி வருகிறார். இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘திருமல’ படத்தில் இடம் பெற்ற ‘தாம் தக்க’ பாடலின் வீடியோ ஒன்றை பகிர்ந்த ரசிகர் ஒருவர் நடனத்திற்கு விஜய் தான் ஆசான் என்பது போல குறிப்பிட்டிருந்தார். தற்போது இது தான் விஜய் மற்றும் ஜூனியர் என் டி ஆரின் ரசிகர்களின் ட்விட்டர் போராக துவங்கியுள்ளது.

விஜய்யின் இந்த விடியோவை கண்ட ஜூனியர் என் டி ஆர் ரசிகர் ஒருவர் ஜூனியர் என் டி ஆர் மற்றும் லாரன்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை பகிர்ந்தார். இதற்கடுத்து இரு ரசிகர்களும் மாறி மாறி விடீயோக்களை பகிர துவங்கிவிட்டனர். இதற்கும் மேலாக ரசிகர் ஒருவர் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு ஆடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து சாந்தனுவை டேக் செய்துவிட்டார். இந்த டீவீட்டை கண்ட நடிகர் சாந்தனு ஜூனியர் என் டி ஆரும் சிறந்த டான்ஸர் தான் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே, இந்த விஷயத்தில் இருவரையும் ஒப்பிடாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-
Advertisement