விஜயுடன் நடிப்பதாக இருந்த படம்.! போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்ட லைலா.!

0
2650
Laila

தனது ஆரம்ப காலத்தில் விஜய் ஹீரோவாக நடித்த பல படங்கள் தோல்வியில் தான் முடிந்தது. அந்த சமயத்தில் தான் தனது அப்பா மற்றும் இயக்குனர் சந்திரசேகரை விட்டு விக்ரமன் இயக்கத்தில் வந்த ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்தார் விஜய்.

Image result for Vijay And Laila

இந்த படத்தின் மூலம் அவருக்கு ஒரு காதல் ஹீரோ இமேஜை கிடைத்தது . அந்த படம் தான் அவருக்காக ப்ரேக் ஆகும். சரியாக சொல்லபோனால் இயக்குனர் விக்ரமன் சரியான நேரத்தில் வந்து விஜய்க்கு ஒரு நல்ல படத்தைக் கொடுத்தார். அதன் பின் பல காதல் படங்களில் நடித்து மாஸ் காட்டினார் விஜய்.

- Advertisement -

மீண்டும் விஜயை வைத்து அதே போன்று ஒரு காதல் படத்தை இயக்க முடிவு செய்து ‘உன்னை நினைத்து’ என்ற ஒரு காதல் ஸ்க்ரிப்டை தயார் செய்தார் விக்ரமன். இதில் விஜய் நடிக்கவும் ஒப்புக் கொண்டு போட்டோ சூட் எல்லாம் முடிந்து நடிக்க ஆர்ம்பித்தார். படத்தின் சூட்டிங் ஆரம்பித்து ஒரு நாளில் படத்தில் இருந்து விலகினார் விஜய்.

https://www.instagram.com/p/BwkUel8D_Mm/?utm_source=ig_embed

இந்த நிலையில் நடிகை லைலா உன்னை நினைத்து படத்திற்காக விஜயுடன் நடத்திய போட்டோ ஷூட்டின் போது எடுக்கபட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஹீரோ விஜய் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement