இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வருகிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குகிறார் மணிரத்தனம்.

பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் என்று பத்திரிகையில் வந்த செய்தி

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க தேர்வு செய்யப்பட்டவர் தளபதி விஜய் தான் என்று தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : 15 வருடங்களுக்கு முன்பே அர்னால்டின் இந்த படத்தை தமிழில் எடுத்திருக்காங்க – ஹீரோ யார் தெரியுமா ?

Advertisement

இந்த படத்திற்க்காக தளபதி விஜய்யிடம், இயக்குனர் மணிரத்னம் அவர்கள் ஒரு வருடம் தேதிகள் கேட்டு உள்ளார். அவ்வளவு தேதிகள் கொடுக்க முடியாது என்று விஜய் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதே போன்று இந்த படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிடம் பேசப்பட்டது. அவரும் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

Advertisement

அதற்கு பிறகு தான் பல நடிகர்களை தேர்வு செய்து படத்தின் வேலைகள் போய் கொண்டு உள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள படம் மாஸ்டர். இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். கொரோனா காரணமாக படம் தள்ளி போய் கொண்டு உள்ளது.

Advertisement
Advertisement