இந்த ஒரு போட்டோக்கு பின்னாடி இத்தனை டேக்கா – வைரலாகும் ஜில்லா படத்தின் Unseen வீடியோ.

0
9335
jilla

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் தான். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் தளபதி விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த படத்தின் மற்றும் இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு நேசன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த படம் ஜில்லா.

Mohanlal | Highest Ever Remuneration | Jilla - Filmibeat

- Advertisement -

இந்த படத்தில் மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் உருவாக்கப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இதுவரை யாரும் பார்த்திராத அறிய வீடியோ. தற்போது இதை ரசிகர்கள் அனைவரும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

இந்த படத்திற்கு முன்பு அதாவது 2013 ஆம் ஆண்டு மோகன்லால் அவர்கள் திரிஷ்யம் என்ற படத்தில் நடித்திருந்தார். திரிஷ்யம் படம் மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம். மேலும், சில தினங்களுக்கு முன்பு தான் மோகன் அவர்களின் பிறந்தநாள் என்பது குறிப்பித்தக்கது. பிகில் படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தற்போது அந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது. ஏப்ரல் மாதமே இந்தப் படம் வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா காரணமாக இந்த படத்தின் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. மாஸ்டர் படத்தின் பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement