கத்தில் படத்தில் விவசாயி பிரச்சனை எடுத்த முருகதாஸ்,விஜய் 62வில் பெரிய பிரச்சனையை கையில் எடுக்கிறாரா – புகைப்படம் உள்ளே

0
2236

முருகதாஸ் இயக்கும் விஜயின் 63வது படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூஜை போடப்பட்டது. இந்த பூஜையின் போட்டோ வெளிவந்து ட்ரெண்ட் ஆனது. மேலும், இந்த படம் கண்டிப்பாக தீபாவளி ரிலீஸ் என முருகதாஸ் அறிவித்துவிட்டார்.

இதற்காக வேலைகள் தற்போது துவங்கியுள்ளது. கத்தில் படத்தில் விவசாயிகள் பிரச்சனையை கையில் எடுத்த விஜய் இந்த படத்தில் மீனவர்களின் பிரச்சனையை பற்றி பேசுகிறார்.

மேலும், சமீபத்தில் வந்த ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவனின் பிரச்சினை மற்றும் கடல் கடந்த சென்று மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையின் அட்டூழியம் குறித்தும் இந்த படத்தில் விஜய் பேசுவார் என கூறப்படுகிறது.

இதற்காக சென்னை ECRல் உள்ள முட்டுக்காடு பகுதியில் பல நூறு படகுகளுடன் உள்ள செட் ஒன்று போடப்பட்டுள்ளது. அந்த செட்டின் போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.