நன்றி கெட்ட நாய் அஜித் – ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்த ஹேஷ் டேக் – காரணம் விஜய்யின் தந்தை தான்.

0
2804
Vijay
- Advertisement -

ட்விட்டரில் நடிகர் அஜித்துக்கு எதிராக #நன்றி கெட்ட நாய் அஜித் என்ற ஹேஷ் டேக்கும் #SACexposesVijayMafia என்ற ஹேஷ் டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்ததாகவும் தகவல் வெளியானது.இந்த தகவல் வெளியான சிறிது நேர்த்திலேயே நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தந்தை கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்ததும் இல்லை என்றும், தனது தந்தை ஆரம்பித்த கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும் தன் பெயரையோ புகைப்படத்தையோ தனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விளம்பரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அறிவித்து இருந்தார்.இதையடுத்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய்யின் தாயார் ஷோபா, அரசியல் பேச வேண்டாம் என பலமுறை கூறியும் எஸ்ஏசி கேட்காததால் அவரிடம் விஜய் பேசுவதில்லை என்றும், அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார் என்றும் கட்சி தொடங்குவதற்காக இரண்டாவது முறை கையெழுத்து கேட்டபோது நான் கையெழுத்துப் போடவில்லை என்றும் அது மட்டுமல்லாது கட்சியிலிருந்து விலகி விட்டதாகவும் கூறி இருந்தார்.

- Advertisement -

பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ் ஏ சி பேசுகையில், விஜய்யும் நானும் ஒரு அப்பா மகன் எந்த அளவிற்கு பேசுனுமோ அந்த அளவுக்கு தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். திடீரென்று சண்ட கூட வரும். எந்த குடும்பத்தில் அப்பா மகனுக்கு சண்ட வரமா இருந்திருக்கு. ஆனால், எப்படா இப்படி பிரச்னை வரும் அத ஊதி பெருசாக்கிடலாம்னு பாத்துட்டு இருந்தா எப்படி. உங்களுக்கு எல்லாம் தெரியாத ரகசியம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. அது உடையும் போது விஜய்க்கு எல்லா உண்மையும் புரியும். விஜய் ஒரு விஷ வலைல மாட்டிக்கொண்டு இருக்கிறார் அவரை நான் வெளியில் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.

மேலும், விஜய் தன்னுடைய பெயரை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியது பற்றி கேட்ட போது அவரு எடுத்தால் எடுக்கட்டும் என்ன ஜெயிலுக்கு அனுப்பனும்னா அனுப்பட்டும். மகனே தந்தையை ஜெயிலுக்கு அனுப்பினார் என்ற வரலாறு இருக்கட்டும் என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள்#SACexposesVijayMafia என்ற ஹேஷ் டேக்கையும் #நன்றிகெட்டவிஜய் என்ற ஹேஷ் டேகையும் பதிவிட்டு நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சிக்கு ஆதரவாக ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

-விளம்பரம்-

இந்த ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்தது. இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் அஜித்திற்கு எதிராக #நன்றி கெட்ட நாய் அஜித் என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி அஜித்திற்கு எதிராக பல மீம்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஹேஷ் டேக்கும் இந்திய எ;அளவில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

Advertisement