விஜய்க்கு பக்கத்தில் இருக்கும் குழந்தை இந்த பிரபல நடிகரா.! புகைப்படம் இதோ.!

0
332

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகிறார்கள். அவர்களுக்கு அடுத்தபடி 90 காலகட்டத்தில் இருந்து இன்று வரை ஒரு முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. நேற்று தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

vijay and surya

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனாக இருந்தாலும் நடிகர் சூர்யா தனது கடின உழைப்பின் மூலம் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் நடிகர் சிவகுமாரின் மடியில் ஒரு பக்கத்தில் விஜய்யும், மறுபக்கத்தில் சூர்யாவும் அமர்ந்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட வருகிறது.

நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவருமே சென்னை லயோலா கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் தான். அடித்து போக சூர்யா நடித்த முதல் படமான “நேருக்கு நேர்” படத்தில் விஜயுடன் தான் இணைத்து நடித்திருந்தார். அதன் பின்னர் “பிரிண்ட்ஸ் ” படத்திலும் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான்.

vijay

ரசிகர்களுக்கு தாங்கள் விரும்பும் நடிகர்களின் குழந்தை வயது புகைப்படத்தை பார்த்தலே ஒரு அலாதியான மகிழ்ச்சி தான். அதுவும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான நேற்று இந்த புகைப்படம் வெளியாகி இருந்தது சூர்யாவின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ்சாகவே இருந்தது.