விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி இங்கு தான் படமாக்கப்படுகிறது.

0
4992
master
- Advertisement -

பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாநகரம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தினை எக்ஸ்பி நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதேபோல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருவது தான் இந்த படத்தின் மாபெரும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே வேட்டை படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக அசத்தி இருந்தார்.

-விளம்பரம்-
Vijay-sethupathi

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிக மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் படத்தின் இறுதிகட்ட பணிகளை படு மும்முரமாக செய்து வருகிறது படக்குழு. சமீபத்தில் வந்த தகவலின்படி இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இங்கே படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான சண்டைக்காட்சிகளை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : நயன்தாரா கோபபட்டா பறக்கும். அவரு தான் அதிகம் திட்டு வாங்குவர். நயனுடன் ஜோடியாக நடித்த ஹீரோ பேட்டி.

- Advertisement -

மேலும் இந்த சண்டைக்காட்சியில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதிக்கொள்ளும் சண்டைகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதும் இந்த ஆக்ஷன் நிறைந்த சண்டைக்காட்சியில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா தான் பணியாற்ற இருக்கிறார். இவர் ஏற்கனவே, விஜய்யின் பல்வேறு படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். என்வே, மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் சண்டை கண்டிப்பாக அதிரடியாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இருக்கிறார்களாம்.

master

சமீபத்தில் இந்த படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நேருக்குநேர் மிகவும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வது போல புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேலும், இருவரது முகத்திலும் ரத்த காயங்களுடன் சட்டை இல்லாமல் இருந்தது. எனவே, தற்போது வெளியாகியுள்ள தகவல் படி பார்த்தால் மூன்றாவது போஸ்டரில் இடம் பெற்ற அந்த குறிப்பிட்ட காட்சி தான் படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஒருவேளை அப்படி மட்டுமிருந்தால், கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டைக் காட்சி படு மாஸாக இருக்கும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

-விளம்பரம்-
Advertisement