பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் விஜய் மற்றும் விக்ரம்.! வெளியான மாஸ் தகவல்.!

0
1412
Vijay-Vikram

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக படம் எடுத்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ஷங்கர். சமீபத்தில் நடிகர் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து, பிரம்மாண்டமான 2.0 படத்தை எடுத்து உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தார். அந்தப் படமும் வசூலில் சாதனை படைத்தது.

Image result for Vijay and vikram

‌ஷங்கர் தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். 2.0, இந்தியன் 2 என்று 2 சீரியசான கதைகளை அடுத்தடுத்து இயக்கியதால் தனது அடுத்த படத்தில் இளமைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் எடுக்க முடிவு செய்து இருக்கிறார் என்கிறார்கள்.

இதையும் படியுங்க : டைட்டான உடையில் உடற்பயிற்சி.! வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்த ரம்யா.!

- Advertisement -

இந்தியன் 2 படம் இழுபறியில் இருப்பதால் இந்த படத்திற்கு முன்பு வேறு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் சங்கர். தற்போது இதற்காக ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்டிடம் அவர் பேசிக் கொண்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஹீரோ கதையான அந்தப் படத்தில், விஜய்யும் விக்ரமும் இணைந்து நடிக்கிறார்களாம்.

ஏற்கனவே சங்கர் மல்டி ஹீரோகளை வைத்து பாய்ஸ் என்ற படத்தை எடுத்தார்.
அதுபோன்ற ஒரு கதையை தான் இயக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. இந்த படத்தில் விஜய் மகன் சஞ்சய் மற்றும் விக்ரம் மகன் துருவ் இருவரையும் நடிக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement