விஜய் ஆண்டனி 3.0 இசை நிகழ்ச்சி ரத்து – மன்னிப்பு கேட்டு விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கை

0
73
- Advertisement -

இசை நிகழ்ச்சி ரத்து ஆனது தொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே இசையமைப்பாளர்கள் இசை கச்சேரி நடத்துவது அதிகமாகி வருகிறது. சமீபத்தில் தான் ஜிவி பிரகாஷ் உடைய இசைக்கச்சேரி நிகழ்ச்சி நன்முறையில் முடிந்தது. அதேபோல இந்த வருடம் ஏ.ஆர் ரகுமான், இளையராஜாவுடைய இசைக் கச்சேரியும் சிறப்பாக முடிந்திருந்தது.

-விளம்பரம்-

இவர்களைப் போலவே சில வருடங்களாகவே விஜய் ஆண்டனியும் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதற்கு முன்பு இவர் நடத்திய இசை நிகழ்ச்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இவர் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று விஜய் ஆண்டினி 3.0 லைவ் கான்செர்ட் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற இருந்தது.

- Advertisement -

விஜய் ஆண்டனி 3.0 இசை நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த நிகழ்ச்சியின் உடைய தேதி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. காரணம், விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி தர மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. இசை நிகழ்ச்சி நடத்தப்படும் இடத்தில் குடியிருப்பு பகுதிகள் அதிகமாக இருப்பதால் பாதிப்பு ஏற்படும் என்றும், உரிய வசதிகள் செய்ய முடியாது என்றும் காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

விஜய் ஆண்டனி அறிக்கை:

இந்நிலையில் இது தொடர்பாக விஜய் ஆண்டனி அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், வணக்கம் நண்பர்களே, சில எதிர்பாராத காரணங்களாலும் தற்போது சென்னையில் இருக்கும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசையின் பேரில் இன்று நடக்க இருந்த விஜய் ஆண்டனி 3.0 லைவ் கான்செர்ட் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சி பற்றிய தகவல்:

இதனால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களுக்கு நான் ரொம்ப வருத்தப்படுகிறேன். இந்த நிகழ்ச்சியின் உடைய புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களுடைய புரிதலுக்கு நன்றி. புதிய நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். தற்போது இவருடைய அறிக்கை தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி திரைப்பயணம்:

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த படங்கள் ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘ஹிட்லர்’ . இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது இவர் கங்கன மார்கன் மற்றும் அக்னி சிறகுகள் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement