இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2005 வெளியான சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் நான் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அந்த படத்தை தயாரித்தது அவரது மனைவி பாத்திமா தான். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கின்றனர்.
இப்படி ஒரு நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மீராவின் இறப்பிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பல பிரபலங்கள் நேரில் சென்று தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தற்கொலை குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
He Lost his dad at 7 (commited suicide)
— 𝗞𝗼𝗹𝗹𝘆𝘄𝗼𝗼𝗱 𝗧𝗮𝗹𝗸𝘀 (@kollywoodtalks) September 19, 2023
Now Lost his daughter (Commited Suicide)
Stay Strong #VijayAntony 💔 pic.twitter.com/MbXr2dVmdg
அந்த வீடியோவில் பேசியுள்ள அவர் ‘வாழ்க்கையில் ஒருவருக்கு எவ்வளவு பெரிய துயரம் வந்தாலும் என்ன கஷ்டம் வந்தாலும் தற்கொலை மட்டும் செய்யக்கூடாது. அதுவும் தான் வாங்காத கடனுக்காக ஒருவர் தற்கொலை செய்யவே கூடாது அந்த குழந்தைகளை நினைத்து பார்க்கும் போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்டார் எனக்கு அப்போது 7 வயது தான்.
அதற்கு என்ன காரணம் என்பதெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். மேலும், அது உங்களுக்கு முக்கியமான விஷயம் கிடையாது. அந்த தற்கொலைக்கு பின்னர் என்னுடைய அம்மா இரண்டு கை குழந்தைகளை வைத்து எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நான் பார்த்தேன். அந்த வலி எனக்கு அதிகம். நான் அமைதியாக இருக்கிறேன் நிறைய பேசாமல் இருக்கிறேன் என்றால் நான் அவ்வளவு விஷயங்களை பார்த்து விட்டேன்.
எனக்கு தெரியாத விஷயங்கலே கிடையாது. வாழ்க்கை எவ்வளவு வலியானது என்பது எனக்கு தெரியும்’ என்று பேசியுள்ளார். விஜய் ஆண்டனியின் 7 வயதில் அவருடைய தந்தையை தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் அவரது தந்தையை போலவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பலரையும் அதிர்ச்சி உள்ளாக்கி இருக்கிறது. இந்த வீடியோவை பகிரும் ரசிகர்கள் பலரும் விஜய் ஆண்டனிக்கு தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்