‘உசுமுலாரேசே, டைலாமோ, லோகு லக்குனு’ – பாடல்களில் புரியாத வார்த்தைகளை வைப்பதற்க்கு பின்னால் இதான் காரணம். விஜய் ஆண்டனி சொன்ன காரணம்.

0
792
vijayantony
- Advertisement -

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா உலகில் நுழைந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தான் அறிமுகமானார். பின்னர் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு வருகிறார் . இவர் கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை 7 வயது இருக்கும் போதே இறந்து விட்டார். பின் இவர் தன் தாய் கவனிப்பில் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி சினிமா துறைக்குள் நுழைந்தார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் சாதித்த அஜித் போன்றே விஜய் ஆண்டனியும் திகழ்கிறார்.

-விளம்பரம்-

2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரு இசையமைப்பாளராக மட்டும் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்து ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவெடுத்தார். பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.

- Advertisement -

‘விஜய் ஆண்டனி புரியாத வரிகளும்’

இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்தார். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. தற்போது இவர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். பெரும்பாலும் விஜய் ஆண்டனியின் பாடல்களில் புரியாத பல வரிகள் வரும்.

புரியாத வரிகளுக்கு காரணம் :

விஜய் ஆண்டனி இசையமைத்த முதல் படமான சுக்ரன் படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் தான். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற ‘சாதிக்கடி போதிக்கடி’ பாடலில் வரும் லேகு லக்குன, லேகு லக்குன முதல் நாக்க முக்கா, டைலாமோ டைலாமோ, மாகையால, லேறி சோனா போன்ற பல படங்களில் வரும் வரிகள் என்னவென்றே நமக்கு தெரியாது. இப்படி ஒரு நிலையில் இதற்கான காரணத்தை கூறியுள்ள விஜய் ஆண்டனி :-

-விளம்பரம்-

விஜய் ஆண்டனி சொன்ன விளக்கம் :

நான் இசையமைப்பாளராக அறிமுகமான காலத்தில் என்னிடம் பெரிதாக வசதி கிடையாது தயாரிப்பாளர்கள் கூட நிறைய பணம் எல்லாம் கொடுக்க மாட்டார்கள் ரொம்ப பட்ஜெட் தான் இதில் நாம் சம்பாதித்து வாழ்க்கையை ஓட்டுவது என்பது மிகவும் கஷ்டம் எனவே என்னுடைய பாடல்கள் நிறைய கருவிகளை வாசித்தால் நிறைய செலவாகும் வேறு ஏதாவது விஷயங்களை வைக்க வேண்டும் இல்லையென்றால் வயலின் வாசிக்க வேண்டும்.

இசைகருவி வாசித்தால் செலவாகும் :

ஆனால் வயலின் வாசித்தால் செலவாகும் எனவே செலவை மிச்சம் செய்வதற்காக வாயிலேயே ஏதாவது போட்டு விடுவேன். ஈர்ப்பை உருவாக்க வேண்டும், மக்களுக்கு பிடிக்க வேண்டும் அதே சமயம் காசும் மிச்சம் ஆக வேண்டும் என்பதால் தான் அதை செய்தேன். எனக்கு இசையில் கர்னாடிக் தெரியாது, வெஸ்டர்ன் தெரியாது. இவ்ளோ அறிவை வைத்துக்கொண்ட நான் ஒரு மியூசிக் டைரக்டர் என்று நம்பி ஊரில் சபதம் போட்டு வந்துவிட்டேன். அதை எப்படி காப்பாற்றுவது அதனால் இதையெல்லாம் செய்தேன் என்று கூறியுள்ளார்.

Advertisement