விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ மிரட்டினாரா? படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
234
- Advertisement -

இயக்குனர் தனா எஸ்.ஏ இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஹிட்லர். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன், கௌதம் மேனன், சரண்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஹீரோ விஜய் ஆண்டனி, சென்னைக்கு வந்து தன்னுடைய நண்பனுடைய தங்கி வங்கியில் வேலைக்கு செல்கிறார். அப்படி அவர் வேலைக்கு செல்லும்போது பயணத்தில் கதாநாயகி ரியாவை பார்க்கிறார். பார்த்தவுடனே அவருக்கு காதல் ஏற்படுகிறது. பின் ஹீரோயின் ரியாவை துரத்தி துரத்தி விஜய் ஆண்டனி காதலிக்கிறார். இன்னொரு பக்கம் சட்டமன்ற தேர்தலில் பொதுப்பணித்துறை அமைச்சராக சரண்ராஜ் இருக்கிறார்.

- Advertisement -

இவர் பல கோடி ரூபாய் செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் அந்த பணத்தை மக்களுக்கு கொடுப்பதற்கு சில வழிகளில் அந்த பணத்தை அனுப்பி வைக்கிறார். ஆனால், அந்த பணத்தை மர்ம நபர் யாரோ ஒருவரால் கொள்ளையடிக்கப்படுகிறது. பின் அவருடைய ஆட்களை சில பேர் கொல்லப்படுகிறார்கள். இந்த வழக்கை கௌதம் மேனன் விசாரிக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த கொலை, கொள்ளைக்காரன் எல்லாம் விஜய் ஆண்டனனி தான் என்று தெரிய வருகிறது. அதற்கு பிறகு என்ன நடந்தது? விஜய் ஆண்டனி ஏன் அப்படி செய்தார்? அதனுடைய பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. வழக்கமான பழைய கதையை தான் இயக்குனர் எடுத்திருக்கிறார். கதை தான் இப்படி என்றால் படத்தில் வரும் காட்சிகளுமே அறுந்த பழசாக இருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே விஜய் ஆண்டனி தான் கொலை, கொள்ளைக்காரன் என்பது தெள்ளத் தெளிவாக காண்பித்து விடுகிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் எந்த ஒரு சுவாரசியமும், சஸ்பென்ஸ்மே இல்லை. கடைசிவரை இயக்குனர் ஏமாற்றத்தை மட்டும் தான் கொடுத்திருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் கதாநாயகி ஆக்சன் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். படத்தில் இருக்கும் ஒரே ஆறுதல் கதாநாயகியின் உடைய நடிப்பு தான். அவருடைய கதாபாத்திரத்துக்கு மட்டும் இயக்குனர் நல்ல ஸ்கோப் கொடுத்து இருக்கிறார். அரைத்த மாவை தான் இந்த படத்திலும் இயக்குனர் கொஞ்சம் கூட திருப்பி போடாமல் அரைத்து இருக்கிறார்.

போலீசாக வரும் கௌதம் மேனன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார். பின்னணி இசை ஓகே தவிர பாடல்கள் பெரிதாக கவர இல்லை. ஒளிப்பதிவு ஓகே. பாதிக்கப்பட்டவர்களுடைய வலி வேதனையை இயக்குனர் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை தான் ஏற்படுத்தியிருக்கிறது. மொத்தத்தில் ஆக்சன், சஸ்பென்ஸ் ஆக உருவாக வேண்டிய படத்தை இயக்குனர் சொதப்பிருக்கிறார் என்று தான் சொல்லணும்.

நிறை:

கதாநாயகியின் நடிப்பு சிறப்பு

பின்னணி இசை ஓகே

ஒளிப்பதிவு சுமார்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை

குறை:

விஜய் ஆண்டனி நல்ல கதை தேர்வு செய்திருக்க வேண்டும்

கதைக்களம் சரியில்லை. அதை கொண்டு சென்ற விதத்திலும் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்

பாடல்கள் பெரிதாக கவர இல்லை

ஆரம்பம் முதல் இறுதி வரை மக்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

மொத்தத்தில் ஹிட்லர்- ஆட்சி சரியில்லை

Advertisement