பராசக்தி டைட்டில் பற்றி நடிகர் விஜய் ஆண்டனி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ ‘ஹிட்லர்’ போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது விஜய் ஆண்டனி அவர்கள் சக்தி திருமுருகன் என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே நடித்தும் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை அருண் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது.
விஜய் ஆண்டனி குறித்த தகவல்:
இதை அடுத்து பல படங்களில் விஜய் ஆண்டனி கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மார்கன். இந்த படம் ஜூன் மாதம் 27ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, பிரகிடா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது.

விஜய் ஆண்டனி சொன்னது:
இதில் பராசக்தி டைட்டில் சர்ச்சை குறித்து விஜய் ஆண்டனி கூறியது, என்னுடைய கேரியரில் ஒருமுறைதான் டைட்டில் பிரச்சனை நடந்தது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்துடன் தான் நடந்தது. அது தெரியாமல் நடந்த ஒரு விஷயம். அவர்களுக்கும் அந்த டைட்டில் என்னிடம் தான் இருக்கிறது என்பது தெரியாத விஷயம். அவர்கள் அந்த டைட்டிலை அறிவித்து விட்டார்கள். மக்கள் மனதில் பதிந்து விட்டது என்பதனால் நானே அந்த டைட்டிலை அவர்களுக்காக விட்டுக் கொடுத்து விட்டேன்.
https://www.youtube.com/watch?v=OO2wBUgF4Wo
டைட்டில் சர்ச்சை பற்றி சொன்னது:
நட்பு ரீதியாக தான் நான் இதை செய்தேன். காரணம், ஒரு தயாரிப்பாளர் உடைய வழியும் வேதனையும் நன்றாகவே தெரியும். இது போன்ற டைட்டில் பிரச்சனைகள் வருவது இயல்பான ஒன்றுதான். நாம் ரோட்டில் வாகனத்தை ஓட்டி செல்லும்போது விபத்து எதிர்பாராதமால் நடக்கும். வேண்டுமென்று யாரும் அதை செய்ய மாட்டார்கள். அப்படித்தான் இதையும் நான் பார்க்கிறேன். திரைத்துறையில் எப்போதுவது இது போன்ற பிரச்சனைகள் வரும். இதில் நான் மாற்றியிருந்தேன். அதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்று
கூறியிருக்கிறார்.

பராசக்தி சர்ச்சை:
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் பராசக்தி. இதில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஸ்ரீலிலா, அதர்வா முரளி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தினுடைய டைட்டிலும் விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தி திருமகன் படத்திற்கும் பராசக்தி என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இருவருக்கும் இது 25-வது படம் தான். இந்த படத்தினுடைய தெலுங்கு பதிப்பிற்கு தான் பராசக்தி என்று விஜய் ஆண்டனி பெயர் வைத்திருக்கிறார். ஆனால், சிவகார்த்திகேயனும் அந்த பெயர் வைத்திருந்தார். அதன் பின் அந்த பிரச்சனையை இரு தரப்பினரும் சுமுகமாக பேசி தீர்த்துக் கொண்டார்கள்.






