நான் மீண்டும் வந்ததற்கு காரணம் அவர்கள் தான் – பெரும் விபத்து குறித்து முதல் முறையாக பேசிய விஜய் ஆண்டனி.

0
223
Vijayantony
- Advertisement -

நடிகரும், இயக்குனர், பாடகர் என பன்முகங்களை கொண்ட விஜய் ஆண்டனி 2006ஆம் ஆண்டு வெளியான “கிழக்கு கடற்கரை சாலை” என்ற திரைபடத்தை மூலன் திரையில் அறிமுகமாகினர். பின்னர் நான், சலீம் , இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், டிராபிக் ராமசாமி என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அரசியல் – திரில்லர் திரைப்படமான “கோடியில் ஒருவன்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

நடித்து வரும் படங்கள் :

இப்படத்தை இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா இயக்கியிருந்தார். மேலும், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆதமிகா நடித்திருந்தார். இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள் போன்ற திரைப்படங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் விரைவில் அவை திரைக்கு வரவிருக்கின்றது. இப்படங்களை தவிர்த்து காக்கி, கொலை, பிச்சைக்காரன் 2, ரத்தம், வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

- Advertisement -

படப்பிடிப்பில் விபத்து :

இந்த நிலையில் தான் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி பெரும் விபத்தில் சிக்கி இருந்தார். பிச்சைக்காரன் 2 படத்தற்காக மலேசியாவில் உள்ள லங்கா தீவில் படப்பிடிப்பு நடந்துள்ளது அப்போது கடலில் கப்பல் காட்சி படமாக்கிக்கொண்டிருக்கும் போது இவர் ஜெட் போட்டில் அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்த போது மற்றொரு படகின் மீது மோதி விஜய் ஆண்டனிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

விஜய் ஆண்டனி போட்ட பதிவு :

மேலும் வாய்ப்பகுதியில் சேதமும் பற்களும் உடைந்ததாகவும், விபத்தில் சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் அவரை மீட்டு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியானது. விபத்து குறித்து பதிவிட்ட விஜய் ஆண்டனி ‘அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.

-விளம்பரம்-

மேடையில் பேசிய விஜய் ஆண்டனி :

என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்.வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்’ என்றும் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து முதல் முறையாக பேசி இருக்கிறார் விஜய் ஆண்டனி. அதில் பேசிய அவர் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக ஹீரோயினுடன் jetski வண்டியை ஓட்டி சென்றேன். அப்போது இன்னொரு போட்டில் கேமரா வைத்து படமெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் போட்டை ஒட்டிச் சென்றால்தான் படம் எடுக்க முடியும் என்று நான் ஒரு ரவுண்ட் சரியாக ஓட்டிவிட்டேன். இரண்டாம் ரவுண்டில் இன்னும் படகுக்கு நெருக்கமாக சென்றபோது அந்த படத்தின் விலும்பில் என்னுடைய முகம் மோதி மூக்கு தாடை எல்லாம் உடைந்து நடுக்கடலில் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். சுயநினைவு இல்லாமல் உள்ளே முழுகி விட்டேன். எனக்கு அதெல்லாம் தெரியாது. அப்போது ஹீரோயினும் இன்னொருவரும் சேர்ந்துதான் என்னை காப்பாற்றினார்கள். மிகப்பெரிய சீரியசான விஷயத்தில் இருந்து வெளியில் வந்திருக்கிறேன். நான் மீண்டும் வந்ததற்கு காரணம் அவர்கள் தான்

Advertisement