உலகத்தை ஒரேயடியாக பாம் போட்டு அழிக்கனும் என்று நடிகர் விஜய் ஆண்டனி பதிவிட்ட டீவ்ட் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகமே கொரோனாவால் தற்போது ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. நாடு முழுவதும் ஓமைக்கரான் மற்றும் கொரோனாவின் பரவல் அதிகமாகி வருவதால் மக்கள் அனைவரும் பீதியிலும் கவலையிலும் உள்ளார்கள். இது ஒரு பக்கமிருக்க நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து இருக்கிறது. அதோடு மக்கள் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியுடன் இருந்தும் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருவதால் வருவதால் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் உள்ளார்கள். இதனால் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு என்றும், ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு என்றும் பல்வேறு மாநிலங்களில் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே கொரோனாவின் மூன்றாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் லட்சக்கண மக்கள் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் வருகிறார்கள்.
கொரோனாவின் தாக்கம்:
கொரோனா தாக்கத்தால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். அதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் கொரோனா குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் கடந்த வாரம் மற்றும் பல நடிகர்களுக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பதிவிட்ட டீவ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விஜய் ஆண்டனி பதிவிட்ட டீவ்ட் :
அப்படி என்ன அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் என்றால், கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரன் ஆகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகியில் போட்ட மாதிரி உலகத்தை ஒரேடியாக பாம் போட்டு அழிச்சுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன் என்று தெரிவித்துள்ளார். தற்போது இவரின் பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் ஆண்டனி நடித்த படங்கள்:
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா உலகில் நுழைந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தான் அறிமுகமானார். பின்னர் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு வருகிறார் . பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. தற்போது இவர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். அதோடு தற்போது இவர் இயக்குனராகவும் அவதாரம் எடுக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்க இருக்கிறார்.
விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள்:
அதுமட்டுமில்லாமல் மழை பிடிக்காத மனிதன், கொலை, காக்கி, தமிழரசன் உட்பட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் அக்னி சிறகுகள். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அக்சரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மூடர்கூடம் நவீன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.