பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன் பின்னர் கிரிவலம் நாளை யுகா தமிழகம் பெண் சிங்கம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்னதான் அஜித்தின் மைத்துனர் ஆக இருந்தாலும் இவருக்கு சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரியில் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கி இருந்தார்.
இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகிஇருந்தது. மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியும். சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி.ஆனால், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக காண்பித்து விட்டார் மோகன் என்று ஒரு சர்ச்சையும் வெடித்தது.
இப்படி ஒரு நிலையில் திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்தது. இதற்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆன்டினி ‘உங்கள் அடுத்த பிளாக் பாஸ்டருக்கு வாழ்த்துக்கள்’ என்று ட்வீட் செய்து இருந்தார். ஆனால், இந்த டீவீட்டை போட்ட சில மணி நேரத்தில் டெலீட் செய்துவிட்டார் விஜய் ஆண்டனி.