விஜய் ஆண்டனியின் கொள்ளு பாட்டன் யார் தெரியுமா? தமிழில் இப்படி ஒரு விஷயத்தை செய்த முதல் நபர் என்று பெருமையை பெற்றவர்.

0
341
- Advertisement -

விஜய் ஆண்டனியின் தாத்தா குறித்து பலரும் அறிந்திடாத சுவாரசிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின் இவர் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் ஹரோவாக நடித்து இருக்கிறார். இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை விஜய் ஆண்டனி திருமணம் செய்து கொண்டார். இவர் ஹீரோவாக நடித்த நான் என்ற படத்தை தயாரித்தது அவரது மனைவி பாத்திமா தான். இவர் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருந்தார்.

- Advertisement -

விஜய் ஆண்டனி திரைப்பயணம்:

பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருந்த படம் ரத்தம். இந்த படத்தை அமுதன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. தற்போது இவர் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனி மகள் இறப்பு:

இப்படி இவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பேரிழப்பு நடந்திருக்கிறது. சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து இருக்கிறார். இவருக்கு 16 வயது தான். மீராவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள். மகளின் இறப்பினால் விஜய் ஆண்டனி மற்றும் அவரின் மனைவி பாத்திமா மனம் உடைந்து போய் விட்டார்கள்.

-விளம்பரம்-

விஜய் ஆண்டனி பேட்டி:

தற்போது அதிலிருந்து விஜய் ஆண்டனி மீண்டும் தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிருக்கிறார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் பழைய பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தொகுப்பாளர், உங்களுடைய தாத்தா தான் தமிழில் முதல் நாவலர் எழுதியவர். உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் ஆண்டனி, ஆம் தெரியும். என்னுடைய தாத்தாவிற்கு அப்பா.

விஜய் ஆன்டனி தாத்தா :

இருவருடைய புகைப்படத்தையும் பார்க்கும்போது ஒரே மாதிரி தான் தெரிந்தது. அதை வைத்து தான் நானும் நம்பினேன். இப்படி புகழ் வாய்ந்தவர்கள் இருப்பதை நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது. ஆனால், நான் அவர்கள் எழுதிய நூல்களை படித்ததில்லை. அவர்களைப் போல நானும் சாதிக்க ஆசைப்படுகிறேன். இப்போது தான் இசையில் இருந்து நடிக்க வந்திருக்கிறேன். அதற்குப் பிறகு நான் நிறைய யோசித்து வைத்திருக்கிறேன். கண்டிப்பாக சாதிப்பேன் என்று கூறியிருக்கிறார். அதற்குப் பின் விஜய் ஆண்டனியின் தாத்தா எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் நூலை தொகுப்பாளர்கள் பரிசாக கொடுத்திருக்கிறார்கள்.

Advertisement