நல்லா இருக்கே, யார் இதை செய்தது ? அஜித் படம் பார்த்துட்டு இயக்குனரிடம் கேட்டுள்ள விஜய்.

0
926
Vijay-Ajith
- Advertisement -

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த கில்லி திரைப்படம் வெளியாகி 16 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இருந்தாலும் இந்த படம் தற்போது டிவியில் ஒளிபரப்பானால் கூட ரசிகர்கள் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகிறது. மீடியாவில் இன்னும் கில்லி படம் ட்ரெண்டிங்கில் தான் இருக்கிறது. அந்த அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம்.

-விளம்பரம்-
ajithad

கில்லி படத்தின் ஆக்ஷன் காட்சிகளை போலவே வசனங்களும் வேற லெவல். கில்லி படத்தின் மாஸ் வசனங்களுக்கு சொந்தக்காரர் இயக்குனர் பரதன். இந்நிலையில் பரதன் அவர்கள் சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, தெலுங்கில் வெளிவந்த ஒக்கடு என்ற படத்தின் மூலம் தான் விஜயின் கில்லி படம் எடுக்கப்பட்டது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

- Advertisement -

இந்த படத்திற்கு முன்னாடியே தில்,தூள் போன்ற படங்களுக்கு வசனம் எழுதி இருந்தேன். பின் ஒக்கடு படத்தை அப்படியே தமிழில் ரீமேக் பண்ணலாம் என்று நானும் தரணி சாரும் நிறைய யோசித்தோம். எங்களுடைய முயற்சி எதுவும் வீண் போகவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய் சாரோட எல்லா டயலாக்கையும் நான் தான் சொல்லிக் கொடுத்தேன்.

அப்படியே அவர் உள்வாங்கிக் கொண்டு தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலம் நடித்துக் கொடுத்தார். கில்லி படத்திலிருந்து எனக்கும் விஜய் சாருக்கும் நல்ல நட்பு உறவு ஏற்பட்டது. இந்த படத்தின் வேலைகள் போய்க்கொண்டிருக்கும் போதே மதுர படத்தின் ஷூட்டிங்கும் ஆரம்பித்தது. விஜய் சார் என்னை மதுர படத்தின் டயலாக் எழுத சொன்னார். பின் அவர் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், சில காரணங்களால் தள்ளிக்கொண்டு போய் இருந்தது. அதற்கு பிறகு அவர் என்னை கூப்பிட்டு அழகிய தமிழ் மகன் வாய்ப்பு கொடுத்தார். அதற்கு பிறகு பைரவா படம் மூலம் மீண்டும் அவரை நான் சந்தித்தேன். என்மேல் எப்போதும் நிறைய அன்பும் பாசமும் வைத்திருப்பவர். ஒரு முறை விஜய் சார் என்னிடம் அஜித்தின் வீரம் படம் பற்றி சொன்னார். அவர் சொன்னது என்னன்னா, அஜித்தோட ‘வீரம்’ படம் பார்த்தேன். டயலாக்ஸ் நல்லாயிருந்தது.

உடனே யார் எழுதுனாங்க என்று நான் கேட்டேன். அப்போ பரதன் என்று உங்க பேரை சொன்னாங்க. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது என்று சொன்னார். அவர் அப்படி சொன்னது எனக்கு ரொம்பப் பெருமையா இருந்தது. விஜய் சார் இதெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும், மனம் திறந்து என்னை பாராட்டினார் என்று கூறினார்.

Advertisement