விஜய்க்கு மட்டுமல்ல! விஜய் அவார்ட்ஸில் இந்த விருதை கொடுக்க மறந்துட்டாங்க.!ரசிகர்கள் கோபம் !

0
798
vijay

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதர்பாரக்கப்ட விஜய் அவார்ட்ஸ் விழா நேற்று நடைபெற்றது. இரன்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

vijay awards

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த விழாவில்,ஆண்டு தோறும் கலந்து கொள்ளும் நடிகர் விஜய் இந்த ஆண்டு கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மேலும் அவருக்கு இந்த ஆண்டு மெர்சல் படத்திற்காக ”அபிமான நடிகர் ‘ என்ற விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில பல காரணங்களால் விஜய் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வராததால், அந்த விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. மேலும் பல்வறு தரப்பினருக்கும் விருது வழங்கப்பட்ட போதிலும் சிறந்த சண்டை இயக்குனர் என்ற விருது பிரிவே அறிவிக்கப்படாமல் இருந்தது.

Vijay-awards-

சினிமாவில் ஹீரோக்களை விட அதிகம் தங்களில் உயிரை பணயம் வைத்து நடிப்பது இந்த சண்டை கலைஞர்கள் தான், இதற்காக சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமா துறை அவர்களுக்காக பிரத்யேக விழா ஒன்றை கூட நடத்தியது. அப்படிப்பட்ட சண்டை கலைஞர்களுக்கு மதிப்பு தராமல் இந்த விழாவில் ஒரு பிரிவில் கூட அவர்களுக்கு விருது வழங்கமறந்து போனது சற்று வேதனையான விஷயம் தான்.