தமிழ் சினிமாவால் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வரும் இளைய தளபதி விஜய்க்கு இருக்கு ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இவரது ரசிகர்கள் சிலர் விஜயை கடவுளாக கூட எண்ணுகிரார்கள். அதே போல விஜயை பல ரசிகர்கள் தங்களது வீட்டின் ஒருவராகவே எண்ணி விடுகிறார்கள் போல.

தற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொதுவாக விஜய்யின் படங்கள் வந்தால் பாலபிஷேகம் செய்வது, பேனர்கள் வைப்பது என்று ரசிகர்கள் செய்வது வழக்கம். அதே போல தாங்கள் பயன்படுத்தும் கார், பைக், ஆட்டோ வாகனங்களில் விஜய்யின் புகைப்படத்தை அச்சிடிப்பதை கூட பார்த்திருக்கிறோம்.
https://twitter.com/PaviKrish7/status/1128629463309119488
ஏன் ஒரு சிலர் விஜய் என்று பச்சை குத்திக்கூட இருக்கிறார்கள். இந்த நிலையில்
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஒன்றிய தலைவர் அபேல் என்பவர் தனது வீட்டிலேயே விஜய் புகைப்படம் பதியப்பட்ட பிளக்ஸ் பலகை ஒன்றை அமைத்துள்ளார்.





