விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம். ஒன்று கூடிய 21 சினிமா நடிகர்கள்.

0
1240
vijaybirthday
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு முடிசூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். விஜய்யின் 46வது பிறந்தநாளை ரசிகர்கள்,பிரபலங்கள் கொண்டாட இருக்கிறார்கள். ஜூன் 22ஆம் தேதி அன்று தமிழ்நாடே கோலாகலமாக இருக்கும். ஆனால், இந்த வருடம் கொரோனா பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தலை விரித்து கொண்டு கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டு இருப்பதால் மக்களின் இயல்பு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை Common DP-யை கொண்டு 20-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். மேலும், வரும் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வருகிறது. இதையடுத்து அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கான Common DP இன்று வெளியாகியுள்ளது. அதனை Actresses Kajal Aggarwal, Keerthy Suresh, Varalaxmi Sarathkumar, Andrea Jeremiah, Indhuja, & Amritha, Actors Kathir, Vaibhav, Vikranth, Shanthnu, & Daniel Balaji, Producers Hema Rukmani & Dhananjayan, Music Director Thaman.

- Advertisement -

Lyricist Vivek, Designer Gopi Prasanna, Directors Lokesh Kanagaraj, Mohan Raja, Arunraja Kamaraj, Ajay Gnanamuthu, & Rathna Kumar என்று 21 பிரபலங்கள் இதை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து தற்போது விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு விஜய் அவர்கள் தனது ரசிகர்களுக்கும், நற்பணி மன்றங்களும் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாஸ்டர் படத்தின் பாடல்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement