விஜய் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் உருவாக்கிய கேவலமான ஹேஸ் டேக்.! அதுவும் ட்ரெண்டிங்.!

0
1458
Vijay-Bday
- Advertisement -

இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்றாலே அது ரசிகர்களுக்கு ஒரு திருநாள் போன்று தான். அவரது பிறந்தநாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்யும் திட்டமிட்டுள்ளனர். மேலும், விஜய்யின் பிறந்தநாளையொட்டி விஜய் 63யின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-விளம்பரம்-

அதே போல விஜய் பிறந்தநாளுக்காக விஜய் ரசிங்கர்கள் பல ஹேஷ் டேகுகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் #ThalapathiBdadyCpd என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதே போல ஒரு மோசமான ஹேஷ் டேக்கும் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இதையும் பாருங்க : நடிகை பத்ம பிரியாவா இது திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கார் பாருங்க.! 

- Advertisement -

விஜய்யின் பிறந்தநாள் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது #June22VijayDeathday என்ற ஒரு ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். மேலும், வழக்கம் போல அஜித் ரசிகர்களை சாடி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டீசரில், ‘ ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க ‘ என்ற ஒரு வசனம் கூட வந்தது. அந்த வசனத்தை பலரும் வரவேற்றனர். அப்படி இருக்கு விஜயை கேவலப்படுத்த இப்படி ஒரு செயலை செய்துள்ளது மிகவும் கேவலமான ஒரு செயலாகவே பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement