எனக்கு IPL டிக்கெட் வாங்கி கொடுத்ததே விஐய் தான் – பிரபல நடிகை போட்டுடைத்த உண்மை.

0
530
- Advertisement -

ஐபிஎல் டிக்கெட் வாங்கி கொடுத்ததே பிரபல நடிகர் தான் என்று வரலட்சுமி சரத்குமார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலக்ஷ்மி.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து இருந்தார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதிலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் , விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

வரலக்ஷ்மி அளித்த பேட்டி:

மேலும், இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வி3, கன்னித்தீவு, கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோல் இவர் நடிப்பில் தெலுங்கில் வீரசிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஏஜென்ட் கோட்டபொம்மாளி போன்ற படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த படங்கள் எதுவுமே இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெயரை எடுத்து தரவில்லை. மேலும், இவர் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் மிரட்டிக்கொண்டு வருகிறார்.

விஜய் குறித்து சொன்னது:

அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியாகியிருந்த அனுமன் என்ற திரைப்படத்தில் ஹீரோவிற்கு அக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் வரலக்ஷ்மி. இந்த படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வரலட்சுமி, நான் பார்த்த முதல் இரண்டு ஐபிஎல் போட்டிகள் உடைய டிக்கெட்டை எனக்கு வாங்கிக் கொடுத்ததே தளபதி விஜய் தான் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

கோட் படம்:

இப்படி இவர் கூறியிருந்ததை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் வரலட்சுமி- விஜய் இருவரும் இணைந்து சர்கார் படத்தில் பணியாற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கோட் படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement