சத்தமில்லாமல் தன் தாய்க்காக விஜய் கட்டிய கோவில் – அதுவும் எங்கு தெரியுமா? இதோ வீடியோ.

0
356
- Advertisement -

நடிகர் விஜய் தன்னுடைய தாய் சோபாவிற்கு ரகசியமாக கோவில் கட்டியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், விஜய் அவர்கள் தன்னுடைய தாய் சோபாவிற்காக சாய் பாபா கோயில் ஒன்றை கட்டி இருக்கிறார். விஜய்க்கு சொந்தமாக கொரட்டூரில் நிலம் ஒன்று இருக்கிறது. அங்கு தான் தன்னுடைய தாயுக்கே தெரியாமல் ரகசியமாக விஜய் சாய் பாபா கோவிலை கட்டியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்த கோயிலுடைய கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவர் கிறிஸ்துவராக இருந்தாலும் தன்னுடைய தாய்க்காக இந்த கோயிலை கட்டித் தந்திருக்கிறார்.

- Advertisement -

விஜய் கட்டிய கோவில்:

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் மும்பையில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதே போல் ஒரு கோவிலை அமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். பின் தன்னுடைய கட்சி தொடங்கிய அதே மாதத்தில் தான் இந்த கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் தமிழக வெற்றிக்கழக ஆலோசகர் புஸ்ஸி ஆனந்த், விஜயினுடைய தாய் சோபா ஆகியோர் கலந்திருந்தார்கள்.

லியோ படம்:

அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் சஞ்சய் தட், கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அர்ஜுன் கான் என பலர் நடித்து இருந்தார்கள். விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள்.

-விளம்பரம்-

விஜய் கோட் படம்:

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். திரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் என்றும் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் அரசியல் :

தற்போது பக்ரைன் நாட்டில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மொத்த படபிடிப்பு முடிந்த பிறகு தான் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு டீ-ஏஜிங் டெக்னாலஜிக்கான வேலைக்கு அனுப்பப்படுகிறது. இதை அடுத்து விஜய் கடைசியாக தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு பின் இவர் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

Advertisement