விஜயால் அசிங்கப்பட்ட அஞ்சனா.! போன் செய்து மன்னிப்பு கேட்ட விஜய்.! ஒரு சூப்பர் சம்பவம்.!

0
1353
Anjana
- Advertisement -

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயகியிருந்தார்.  

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னர் தொகுப்பாளினி பணியில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட அஞ்சனா, தற்போது தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார். ஆனால், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிரங்கியுள்ளார் அஞ்சனா.

- Advertisement -

அஞ்சனா, தொகுப்பாளினியாக இருந்த போது பல படங்களின் நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் புலி படத்தின் இசை வெளியீட்டின் விழாவின் போது நடந்த ஒரு சம்பவத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்நதுகொண்டார் அஞ்சனா.

Image result for vijay in anjana wedding

இதுகுறித்து பேசிய அவர், அந்த விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது, சொல்லப்போனால் அது என்னுடைய முதல் நிகழ்ச்சி போல தான் எனக்கு தோன்றியது. ஏனெனில் பெரிய ,பெரிய கலைஞர்கள் பங்கு பெற்ற விழா அது. அந்த விழாவின் போது தான் எனக்கு மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது.

-விளம்பரம்-

அந்த விழாவின்போது விஜய் சாரிடம் சிலருக்கு நினைவு பொருட்களை வழங்குவதற்காக என்னை போய் பேசச் சொன்னார்கள். ஆனால் அப்போது விஜய் சார் கொஞ்சம் சீரியஸாக ஏதோ பேச வேண்டும் என்று முன்பே திட்டம் தீர்த்து வைத்து இருந்தார். இதனால் நாம் அவரிடம் பேச முயன்றபோது அவர், எனக்கு சரியாக பதில் அளிக்காமல் சென்று விட்டார் நானும் அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன்.

Image result for anjana puli audio launch

பின்னர் அடுத்த நாள் என்னை எல்லோருமே ‘உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா விஜய் சாரை போய் பாட்டு பாடச் சொல்வாயா’ என்று பலரும் திட்டி தீர்த்தார்கள். அதன் பின்னர் நான் அங்கு நடந்ததை எடுத்துக் கூறினேன். இந்த விஷயம் எப்படியோ இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் விசாரித்து தெரிந்து விட்டது போல.

அடுத்தநாள் விஜய் ஆபீஸில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் விஜய் சார் பேசியதும் என்னிடம் முதலில் மன்னிப்பு கேட்டார் பின்னர் ‘அன்றைய நாளில் நான் கொஞ்சம் பிஸியாக இருந்தேன், அதனால் உங்களுக்கு என்னால் சரியாக பதிலளிக்க முடியவில்லை’ என்று அவர் கூறியதும் எனக்கு மிகவும் ஷாக்காக தான் இருந்தது.

அவ்வளவு பெரிய மனிதன் நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார் என்று மிகவும் ஆச்சரியப்பட்டேன். அதன் பின்னர் எனது திருமணத்திற்கு கூட அவர் வந்திருந்தார். மிகவும் சாதாரண மனிதரைப் போல வந்த அவர், எங்களை வாழ்த்தி விட்டு அங்கிருந்த சில குழந்தைகளிடம் புகைப்படங்களை எடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் மிகவும் ஸ்வீட்டான மனிதர் அவர்’ என்று கூறியுள்ளார்

Advertisement