அஜித்திற்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ். மேடையில் கூறிய விஜய்யின் தந்தை எஸ் ஏ சி.

0
5035
vijay-ajith

தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் ‘தல, தளபதிக்கு’ ரசிகர்கள் அதிகம். இவர்கள் இருவருக்கும் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அது எல்லாருக்குமே தெரியும். அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் சென்றாலும் ‘தல, தளபதி’ ரசிகர்களை பார்த்து விடலாம். தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த்– கமலஹாசனுக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய் தான்.

தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தான் தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். மேலும், இவர்கள் 2 பேரும் தமிழகத்தின் மெகா சூப்பர் ஸ்டார் என்றும் சொல்லலாம். சமீபத்தில் கூட அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் திரையரங்குகளில் வெறித்தனமாக வசூல் செய்தது. இதனை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது மாஸ்டர் என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

- Advertisement -

அதே போல் தல அஜித் அவர்களின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘விசுவாசம், நேர்கொண்ட பார்வை’ படமும் சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தது. தற்போது தல அஜித் அவர்கள் வலிமை என்ற படத்தில் மும்முரமாக நடித்து கொண்டு இருக்கிறார். ஆனால், அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. எப்போதுமே விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் இடையே சண்டை, சச்சரவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. உண்மையிலேயே விஜயும், அஜித்தும் நல்ல நண்பர்களாக தான் உள்ளார்கள். ஆனால், ரசிகர்கள் தான் நீ பெரிய ஆளா? நான் பெரியாளா? என்றும், என்னுடைய தளபதி தான் சூப்பர்? என்றும், தல தான் சூப்பர்? என்ற பிரச்னையை உருவாக்குகிறார்கள்.

Image

-விளம்பரம்-

இதனால் மக்கள் பார்வையில் இவர்களை எதிரிகளாக பாவித்து விடுகிறார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்கள் சமீபத்தில் தல அஜித் அவர்களுக்கு திடீரென்று சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார். அது என்னவென்றால் கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இதை அறிந்த தளபதி விஜய் அவர்கள் விசுவாசம் படத்தை இயக்கிய இயக்குனர் சிவாவுக்கு, தல அஜித் இருவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். இத்தகவலை விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் விழா மேடையில் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

சமீபத்தில் தான் தனியார் வார இதழ் நடத்திய விருது விழாவில் கடந்த ஆண்டின் சிறந்த பொழுது போக்கு படமாக விசுவாசம் படம் தேர்வு செய்யப்பட்டது. அந்த விருதை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விசுவாசம் படத்திற்கு வழங்கினார். இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அனைவரும் அதிகமாக கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement