விஜய்யால் வார்டு மெம்பராக கூட ஆக முடியாது..! பிரபல அரசியல்வாதி .!

0
234
vijay

இளையதளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sarkar

இந்த விழாவில் பேசிய விஜய்,தமிழ் நாட்டை நல்லவர்கள் ஆள வேண்டும் என்றும், நான் முதலமைச்சராக வந்தால் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்றும் ஒரு வேலை நான் முதல்வராக வந்தால் முதல் வேலையாக ஊழலை ஒழிப்பேன் என்றும் பேசி இருந்தார்.

நடிகர் விஜய் பேசியதை பலர் வரவேற்றாலும், ஒரு சில அரசியல் கட்சியினரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இதனால் பல்வேறு அரசியல் வாதிகளும் விஜய் பேசியதை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் திருப்பூரில் நடந்த ஒரு விழாவில் பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

Actor-vijay

அப்போது நடிகர் விஜய் பேசியது குறித்து விமர்சித்த அவர், சினிமாவில் மற்றவர்கள் எழுதிய வசனங்களையும், மற்றவர்கள் எழுதிய பாடல்களுக்கு வாயசைத்தும் நடித்தவர்கள் எல்லாம் தற்போது தமிழகத்திற்கு முதல்வர்கள் ஆகி விட முடியுமா? தமிழ்நாட்டிற்கு அவர்கள் என்ன செய்தார்கள்.

thaniyarasu-mla

முதல்வராக நினைக்கும் ரஜினியும் கமலுமே மக்களிடம் செல்வாக்கை இழந்து நிற்கிறார்கள். இதில், நடிகர் விஜய்யால் அவர் இருக்கும் பகுதியில் ஒரு வார்டு மெம்பராக கூட ஆக முடியாது. இனி கோடம்பாக்கத்திலிருந்தோ, சாளிகிராமத்திளிருந்தோ வேஷமிட்டுக்கொண்டு, அரசியலுக்கு வரமுடியாது. அப்படியே வந்தாலும் அவர்களை மக்கள் கண்டிப்பாக தலைவராக ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.