ஓட்டு போட வந்த இடத்தில் சிறுவனுக்காக விஜய் செய்த செயல்.! வைரலாகும் வீடியோ.!

0
280
Vijay

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18 ) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் பல்வேறு புதிய கட்சிகளும் களமிறங்கியுள்ளது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டசபைகளுக்கு இடைத்தேர்தல்களும் அந்தந்த தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர்களில் விஜய், ரஜினி, அஜித், கமல் ஆகியோர் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்த்தனர்.

நடிகர் விஜய் காலையிலேயே வாக்களித்தார், அவர் வாக்களித்து வெளியே வந்த போது ஒரு சிறுவன் விஜய்யிடம் வந்து போட்டோ எடுக்க வந்தார், அப்போது விஜய் அவரை வெளியே வரை அழைத்து சென்றார். அதோடு உங்க அப்பா, அம்மா எங்கம்மா என்று கேட்டு அந்த சிறுவனிடம் விசாரித்தார் விஜய்.