அஜித் கூட கிளாஷ் விட்டா விஜய் படத்துக்கு ஹைப் ஏறும்னு விஜய், SAC வற்புறுத்தி ரிலீஸ் பண்ண வெச்சாங்க. விஜய் பட இயக்குனர்.

0
425
vijay
- Advertisement -

விஜய் மற்றும் விஜய்யின் தந்தை குறித்து இயக்குனர் ரமணா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இயக்குனர் வம்சி – தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தளபதி 67 படம்:

இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.இதனை அடுத்து விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு எல்லாம் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாகவோ அல்லது வில்லியாகவோ நடிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் மொத்தம் 6 வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஆதி படம்:

இந்நிலையில் விஜய் மற்றும் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் செய்த செய்ததை குறித்து ஆதி பட இயக்குனர் ரமணா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் ரமணா இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் ஆதி. இந்த படத்தை எஸ் ஏ சந்திரசேகர் தயாரித்திருந்தார். இந்த படத்தில் விஜய், திரிஷா, விவேக், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த நிலையில் ஆதி பட இயக்குனர் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், ஆதி படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தோம். இது குறித்து தயாரிப்பாளர் சந்திரசேகரிடம் ஏற்கனவே கூறிவிட்டேன். அவரும் சரி என்று சொல்லி விட்டார்.

இயக்குனர் ரமணா அளித்த பேட்டி:

ஆனால், அந்த சமயம் பார்த்து அஜித் நடித்த பரமசிவன் படம் பொங்கல் அன்று ரிலீசாக இருந்தது. உடனே சந்திரசேகர் அவர்கள் விஜயின் படத்தையும் பொங்கல் அன்றே வெளியிடலாம். ஒரு போட்டியாக படம் இருக்கட்டும் என்று என்னிடம் கூறினார். நான் ஏப்ரல் 14 தானே வெளியிட முடிவு செய்திருக்கும். அதற்கான பணிகளும் இருக்கிறதே என்று சொன்னேன். உடனே அவர் நான் படத்தை விற்று விட்டேன். சொன்ன தேதியில் நான் ஒப்படைக்க வேண்டும். என்னை டென்ஷன் ஆக்காமல் வேலையை சீக்கிரமாக செய்து கொடுங்கள் என்று சொன்னார். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மூன்று மாத பணியை டிசம்பரில் சுருக்கி செய்தேன் என்று கூறியிருந்தார். இதை நெட்டிசன்கள் பயங்கரமாக விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement