பாமக அன்புமணி ராமதாஸ் இதற்கு நடிகர் விஜய் தொலைபேசியின் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தின் மக்கள் இயக்கமாக மாற்றி மாற்றிய காலத்திலிருந்து அவர் அரசியலுக்கு வரப்போறார் என்று பேச்சுக்களில் இருந்து வந்தன. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மக்கள் இயக்கம் அதன் பின் எந்த ஒரு தேர்தலிலும் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் இருந்து வந்தது.

விஜய் மக்கள் இயக்கம்:

இருப்பினும் நடிகர் விஜய் தனது மக்களை இயக்கப் பொறுப்பாளர்களுடன் அழைத்த அவ்வப்போது ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருவதும் உண்டு. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை நிறைய அழைத்து அவர்களை பாராட்டியும் உள்ளார். மேலும் அவர் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தமிழகத்தில் உள்ள அனைத்து 234 தொகுதியிலிருந்து வரவைத்து அவர்களுக்கு பரிசு அளித்தார். மேலும் அவர்களுக்கு கல்வி உதவி தொகைகளும் அளித்தார்.

Advertisement

அதன் பிறகு விஜய் கண்டிப்பாக அரசியலில் கலைஞரோடு என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவ்வளவு காலமாக இல்லாமல் தற்போது பெரியார் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு விஜய் கட்டளையிட்டால் அதனை செய்து முடிக்கும் தொண்டர்களாகவே மாறிவிட்டனர் அவரது ரசிகர்கள். விஜய் அரசியலுக்கு வந்தால் அவரால் என்ன தாக்கத்திற்கு ஏற்படுத்த முடியும் என்பது காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிறந்தநாள் வாழ்த்து:

மேலும் தற்போது அரசியலில் இருக்கும் தலைவர்களின் பிறந்தநாள் என்றால் தொலைபேசியின் மூலம் அழைத்து அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார். அதுபோன்ற அண்மையில் ஆகஸ்ட் 19 தேதி நடிகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளுக்கும் தொலைபேசியில் அழைத்து அவருக்கு வாழ்த்து இருந்தார். அது அப்போதே விஜய் அரசியலில் வருவது நூறு சதவிதம் உறுதியாகிவிட்டது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

Advertisement

தற்போது விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ படத்தின் போஸ்டர்களின் விஜய் சிகரெட் பிடித்திருக்கும் இந்த போன்ற புகைப்படங்கள் பல இணையத்தில் பரவி வந்த நிலையில் அப்போது இதற்கு அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதேபோன்று இன்று வெளியான ஒரு செய்தித்தாளில் விஜய் மக்கள் இயக்கம் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பாஜகவிற்கும் ஆதரவு அளிக்க உள்ளது போன்ற ஒரு செய்தி வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

Advertisement

லியோ திரைப்படம்:

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Advertisement