அட, விஜய் போட்ட ஸ்டெப் இந்த நடிகருடையது தானா ? நடிகரின் மனைவி பகிர்ந்த செம வீடியோ.

0
128965
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தளபதி விஜய் படத்தின் கதை சுமாராக இருந்தாலும் கூட ரசிகர்கள் அதை சூப்பர் ஹிட் ஆகி விடுவார்கள். அந்த அளவிற்கு விஜய் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் கொண்டவர்.கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை மாநகரம், கைதி ஆகிய வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் தான் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் இருந்தது.இதனை தொடர்ந்து வாதி கம்மிங் என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

- Advertisement -

அதுவும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்பாராத விதத்தில் வாத்தி கமிங் பாடலுக்கு விஜய் மேடையில் நடனமாடியது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. விஜய் ஆடிய அதே நடனத்தை பலவேறு பிரபலங்கள் அதே போல ஆடி வீடியோக்களை பகிர்ந்தனர். இந்த நிலையில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் போட்ட அந்த ஸ்டெப்பை நடிகர் சந்தனுவிடம் கேட்டு தான் விஜய் போட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

நடிகர் சாந்தனு, விஜய்யின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போது இவர் முதன் முறையாக விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் இசை வெளியீட்டுக்கு முன்னதாகவே, நடிகர் சாந்தனு தனது மனைவி நடத்தி வரும் கிகி டான்ஸ் ஸ்கூலில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அந்த வீடீயோவை பகிர்ந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகர் விஜய், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் சாந்தனுவுடன் நடனமாடிய போது, சாந்தனுவிடம் ‘ஹே சாந்தனு நீ போட்ட மூமண்ட் போடலாமா’ என்று கூறிவிட்டு பின்னர் சாந்தனு ஆடிய ஸ்டெப்பை ஆடினாராம். இந்த தகவலை சாந்தனுவின் மனைவி கீர்த்தி வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட சாந்தனு, அது ஈஸியான ஸ்டெப் தான். ஆனால், அவர் போட்டதால் இப்போ எல்லாரும் அதை ஆடுறாங்க என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement