குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்ற விஜய், நடனமாடிய மகள். ரசித்து பார்த்த விஜய். வைரலாகும் வீடியோ

0
2348
Vijay
- Advertisement -

திருமண வீட்டில் விஜயின் மகள் நடனமாடி அசத்தி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வாரிசு.

-விளம்பரம்-

குடும்பங்கள் கொண்டாடும் லிஸ்டில் இந்த படம் சேர்ந்தது. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, நாசர், போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

- Advertisement -

லியோ படம்:

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது.

படம் குறித்த தகவல்:

மேலும், கடந்த வாரம் தான் நடிகர் அர்ஜுன் பிறந்தநாள் முன்னிட்டு லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. தற்போது திரிஷா-விஜய் லியோ படத்தின் படப்பிடிப்புக்காக நார்வே சென்று இருக்கிறார்கள். அங்கு எடுத்த புகைப்படம் தான் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ரஜினியின் ஜெயிலர் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்திருப்பதால் விஜயின் லியோ படம் அந்த சாதனையை முறியடிக்கப் பட குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறதாக கூறப்படுகிறது

-விளம்பரம்-

விஜய் குடும்பம்:

இதனை அடுத்து விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் குறித்த தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று வெங்கட் பிரபு கூறி இருக்கிறார். இந்த நிலையில் விஜயின் மகள் திவ்யா நடனம் ஆடி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நடிகர் விஜய் விஜய் அவர்கள் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விஜய் மகள் நடனமாடிய வீடியோ:

சங்கீதா விஜயின் தீவிர ரசிகை ஆவார். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என்ற இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
தற்போது விஜய்யின் மகன் வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். இவரும் கூடிய விரைவில் சினிமாவில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தன்னுடைய மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யா உடன் உறவினர் வீட்டின் திருமணத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு விஜயின் மகள் திவ்யா நடனமாடி அசத்திருக்கிறார். தற்போது அந்த வீடியோவை தான் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement