தொகுப்பாளினி, நடிகை தாண்டி டிடியின் அடுத்த அவதாரம்.! ரசிகர்கள் ஏற்பார்களா.!

0
405

தொலைக்காட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தார் பிரபல தொகுப்பாளினியான டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார் டிடி.

Image result for vijay tv dd

டிடியின் தனிப்பட்ட பர்சனல் வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தாலும் அவற்றை மறந்துவிட்டு சற்று மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர், தொகுப்பாளினியாக 20 ஆண்டுகளை கடந்தார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால், கடந்த ஒரு வருடமாக இவரை ஆல்பம் பாடல்களிலும், நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராகவும் மட்டுமே கலந்து கொண்டார் டிடி. இந்த நிலையில் ஓராண்டுக்கு பின்னர் விஜய் டிவியில் ‘என்கிட்ட மோதாதே 2 ‘என்ற நிகழ்ச்சி மூலம் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார் டிடி.

இதுவரை தொகுப்பாளினியாகும், நடிகையாகம் இருந்த டிடி தற்போது வானொலியிலும் காலடி எடுத்து வைத்துள்ளார், ஆம், ஒரு பிரபல வானொலியில் RJ-வாக டிடி களம் இறங்கியுள்ளார். இதிலும் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement